புதன், அக்டோபர் 19, 2011

ஹஸாரே குழுவில் பிளவு:2பேர் ராஜினாமா!!!

Two_Core_Memberபுதுடெல்லி:ஹஸாரே குழுவினரின் மத்தியக் கமிட்டியிலிருந்து ராஜேந்திர சிங் மற்றும் பி.வி.ராஜகோபால் ஆகியோர் ராஜினாமாச் செய்துள்ளனர்.அரவிந்த் கேஜ்ரவாலின் ஒருதலைபட்சமான நிலைப்பாட்டை கண்டித்து அவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
எந்த திசையை நோக்கி இவ்வமைப்பு செல்கின்றது என்பது தெரியவில்லை என ராஜினாமா கடிதத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் ராஜினாமா கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என கேஜ்ரிவால் அறிவித்துள்ளார். ஹஸாரே மெளனவிரதமிருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக