புதுடெல்லி:பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீது உச்சநீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘சில மனநோயாளிகளுக்கு சட்டத்தையும், சட்டத்தை செயல்படுத்துபவர்களையும் அஞ்சாமல் யாரையும் தாக்கலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.
இதற்கு அரசு கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். ஜனநாயகத்தை பாதுகாக்கும் குரல்களை அடக்கி ஒடுக்க முனையும் சங்க்பரிவார நிலைப்பாட்டின் ஒரு பகுதிதான் இத்தாக்குதல்.’ இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக