ஸன்ஆ:யெமன் உள்துறை அமைச்சக கட்டிடத்தில் ராணுவத்தினருக்கும், ராணுவத்தில் இருந்து மாறிய புரட்சி ராணுவத்தினருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது.28 புரட்சி ராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ராணுவ உடையில் வந்தவர்கள் உள்துறை அமைச்சக கட்டிடத்தில் நுழைந்து துப்பாக்கியால் சரமாரியாக
சுட்டதாகவும் யெமன் போலீஸ் கூறுகிறது.
அப்பகுதியின் கட்டுப்பாட்டை மத்திய படை ஏற்றுக்கொண்டுள்ளது. யெமனில் பிரபல பழங்குடியின தலைவர் ஸாதிக் அல் அஹ்மரை ஆதரிக்கும் ராணுவத்தினர்தாம் தாக்குதல் நடத்தினார்கள் என்றும், அமைச்சகத்தின் கட்டுப்பாட்டை தங்கள் வசம் கொண்டுவர அவர்கள் முயற்சித்ததாகவும் யெமன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேவேளையில் அப்பகுதியின் கட்டுப்பாடு முழுக்க ராணுவத்தின் வசம் வரவில்லை என்றும், மோதல் தொடருவதாகவும் நேரில் கண்டோரை மேற்கோள்காட்டி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக