டெல்லி:ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்திலிருந்து இந்தியா பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்று மத்திய தலைமை தணிக்கை அதிகாரியின்(சி.ஏ.ஜி.) அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் தொடர்பான மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில், அணுசக்தி விதிமுறைகள் குறித்த பல்வேறு
குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கையில், அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திற்கு தன்னிச்சையாகச் செயல்படும் அதிகாரம் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. இந்த வாரியத்துக்கு சட்ட ரீதியான அந்தஸ்து வழங்கப்படவில்லை என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அணு உலைகளின் பாதுகாப்பு குறித்த விதிகளை மாற்றி அமைப்பதற்கான அதிகாரம் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திடம் இல்லை என்றும் கூறியுள்ள சி.ஏ.ஜி., பாதுகாப்பு விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டும் தண்டனைகள் குறித்து முடிவு செய்யும் அதிகாரமும் வாரியத்திடம் இல்லை என்றும் கூறியுள்ளது.
ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலையில் விபத்தில் இருந்து இந்தியா பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ள சி.ஏ.ஜி. தற்போதுள்ள விதிகளின்படி, விபத்துக்குக் காரணமாகும் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 500 ரூபாய் வரை மட்டுமே அபராதம் விதிக்க முடியும் என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக