நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக மக்களவை எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜூடன் எந்த நேரத்தில் வேண்டுமானாலும், எந்த இடத்தில் வேண்டுமானாலும் விவாதம் நடத்தத் தயார் என காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மக்களவை எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், சுஷ்மா இவ்விவகாரம் பற்றி மக்களவையில் விவாதம் நடத்தவேண்டும். சுஷ்மாவுடன் விவாதம் நடத்த எப்போது வேண்டுமானாலும் நான் தயார். இது தொடர்பான விவாதத்திற்கு சுஷ்மா தயாராக இருந்த போதிலும், பாரதீய ஜனதா தலைவர்கள் மற்றும் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மவுனமாக இருப்பது ஆச்சரியமளிக்கிறது’ எனக் கூறினார்.
முன்னதாக, நிலக்கரி சுரங்க முறைகேடு விவகாரம் தொடர்பாக திக்விஜய் சிங் தன்னுடன் விவாதம் நடத்தவேண்டுமென சுஷ்மா சுவராஜ் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக