வியாழன், ஆகஸ்ட் 23, 2012

ஈரான் சுற்றுப்பயணம்:அமெரிக்கா எச்சரிக்கை விடுத்ததா? – எகிப்து மறுப்பு !

Mursiகெய்ரோ:எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி ஈரான் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்ததாக வெளியான செய்தியை எகிப்து மறுத்துள்ளது.அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக முஹம்மது முர்ஸி ஈரான் செல்ல உள்ளார். ஈரான் இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு அந்நாட்டிற்கு செல்லும் முதல் எகிப்திய
அதிபர் முஹம்மது முர்ஸி ஆவார்.
இந்நிலையில் முர்ஸியின் ஈரான் சுற்றுப்பயணம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்தி வெளியானது.
ஆனால், இச்செய்தி முற்றிலும் அடிப்படையற்றது என்று முர்ஸியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் டாக்டர்.யாஸிர் அலி தெரிவித்துள்ளார். டெஹ்ரான் மாநாட்டில் பங்கேற்கும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் ஐ.நாவின் சட்டங்களை பேண ஈரானை தூண்டுமாறு மட்டுமே அமெரிக்கா எகிப்திற்கு தெரிவித்தது என்று யாஸிர் அலி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக