பெங்களூர்:அஸ்ஸாம் கலவரத்தைத் தொடர்ந்து எஸ்.எம்.எஸ் வதந்திச் செய்திகளை பரப்பி வடகிழக்கு மாநில மக்களை பீதியில் ஆழ்த்தி சொந்த மாநிலத்துக்கு கூட்டமாக வெளியேறச் செய்த ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் அட்டூழியம் தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த புதன் கிழமை இரவு யஷ்வந்த்பூர்-கண்ணூர் எக்ஸ்பிரஸில் மங்களூருக்கு வேலைத் தேடி 98 வெளிமாநில தொழிலாளர்கள் பயணித்தனர். இவர்கள் மேற்குவங்காளம்,
ஒரிஸ்ஸா, ராஜஸ்தான், பீகார் மற்றும் இதர மாநிலத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். இவர்களில் பல மதத்தவர்களும் அடங்குவர்.
இந்நிலையில் பெங்களூரில் ஒரு மாநாட்டில் கலந்துகொண்டு அதே ரெயிலில் சங்க்பரிவாரத்தின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பியின் உறுப்பினர்களும் ஏறியுள்ளனர்.
வெளிமாநில தொழிலாளர்களில் 66 பேர் மே.வங்காள மாநிலத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். இவர்களை கண்டதும் ஏ.பி.வி.பி தீவிரவாதிகள், வங்காளதேஷ குடியேற்றக்காரர்கள் என கோஷம் எழுப்பியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்களில் ஒருவரான ஒரிஸ்ஸாவைச் சார்ந்த ஷ்யாம் சர்மா கூறுகையில், “நாங்கள் வங்காளதேசத்தைச் சார்ந்தவர்கள் அல்லர் என விளக்கமளித்த போதும் அதை காது கொடுத்து கேட்காமல், எங்களது பைகளையும், சட்டைப் பாக்கெட்டுகளையும் சோதனையிட்டனர். அவர்களில் பெரும்பாலோர் எங்களை கேலிச்செய்து சிரித்து மகிழ்ந்தனர்.” என கூறுகிறார்.
ரெயில் கர்நாடகா மாநிலம் மண்ட்யா என்ற பகுதியை அடையும் வரை ஏ.பி.வி.பி தீவிரவாதிகள், வெளிமாநில தொழிலாளர்களை துன்புறுத்தியுள்ளனர். பின்னர் அவர்களை அடித்து, உதைத்து ரெயிலில் இருந்து வெளியே தள்ளியுள்ளனர். இவற்றையெல்லாம் ரெயிலில் பயணித்த பயணிகள் மெளனமாக வேடிக்கை பார்த்துள்ளனர்.
மண்ட்யா போலீஸ் இச்சம்பவம் தொடர்பாக ஒன்பது பேர் மீது வழக்கு பதிவுச் செய்துள்ளது. இச்சம்பவம் குறித்து அரசு ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்ட் மீர் ஆரிஃப் அலி கூறுகையில், “சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்ற வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.
பின்னர் வெளிமாநில தொழிலாளர்களின் விபரங்களை சேகரித்த போலீஸ், அவர்களை தனி வாகனங்களில் பெங்களூருக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக