புதுடெல்லி/குவஹாத்தி:அஸ்ஸாமில் நடந்துவரும் இனக்கலவரத்தில் அமைச்சர் ஒருவருக்கு பங்கிருப்பதாக அஸ்ஸாம் கனபரிஷத்(ஏ.ஜி.பி) தலைவரும், முன்னாள் முதல்வருமான பிரபல்ல குமார் மகந்தா குற்றம் சாட்டியுள்ளார். முன்னாள் தீவிரவாதிகளுடனான உறவை பயன்படுத்தி அந்த அமைச்சர், முதல்வர் தருண் கோகோய்க்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாக மகந்தா
கூறுகிறார்.
மேலும் அவர் கூறியது: “ஆளுங்கட்சியான காங்கிரஸில் கோஷ்டிச் சண்டை, லோயர் அஸ்ஸாம் மாவட்டங்களில் பலரின் உயிரை பறித்துள்ளது. போடோ பகுதிகளில் முன்னாள் தீவிரவாதிகளுடனான உறவையும், ஊடகங்களில் தனது செல்வாக்கையும் பயன்படுத்தி குழப்பத்தை உருவாக்கி, முதல்வர் தருண் கோகோயை அப்பதவியில் இருந்து நீக்க அந்த அமைச்சர் மேற்கொண்ட முயற்சிதான் கலவரம் உருவாக காரணமானது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்துவதில் அரசு தோல்வியை தழுவியது. தேவையான இடங்களில் பாதுகாப்பு படையினரை அனுப்பவில்லை. சர்வதேச எல்லை திறந்து கிடக்கிறது. சட்டவிரோதம் குடியேற்றம் நீடிக்கிறது. குடியேற்றக்காரர்களை கண்டுபிடித்து அவர்களை திருப்பி அனுப்ப அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இவ்விவகாரத்தில் அரசு பங்களாதேஷ் நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். இவ்வாறு மகந்தா கூறினார். ஆனால், அவர் அமைச்சரின் பெயரை கூற மறுத்துவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக