டோக்கியோ:கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் தேதி நிகழ்ந்த பூகம்பத்தால் தகர்ந்துபோன புகுஷிமா அணுமின்நிலையத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள கடலில் பிடித்த மீன்களில் அதிக அளவிலான ரோடியோ கதிரான ஸீஸியத்தின் அம்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசின் பாதுகாப்பு தரத்தில் இருந்து 258 மடங்கு அதிகமான கதிர்வீச்சு இம்மீன்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று
டோக்கியோ எலக்ட்ரிக் பவர் அறிவித்துள்ளது.
புகுஷிமா அணுமின்நிலையம் சேதமடைந்த பொழுது இப்பகுதியில் மீன் பிடிக்க அரசு தடை விதித்திருந்தது. அணுமின்நிலையத்தில் விபத்து நேர்ந்து ஒரு மாதம் கழித்து 11 ஆயிரம் டன் நீரை அணுமின் நிலைய நிறுவனம் கடலில் கொட்டியது. தொடர்ந்து ஏராளமான மீன்கள் செத்துப்போயின.
புகுஷிமாவுக்கு அடுத்துள்ள கடல் பகுதியில் ரேடியோ கதிர்வீச்சின் அளவை அறிய அரசு புதிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக