டெஹ்ரான்:தேசிய பாதுகாப்பு வர்த்தக தினத்தையொட்டி ஈரான் ஆறு பெரும் பாதுகாப்பு சாதனைகளை வெளியிட்டுள்ளது. நவீனப்படுத்தப்பட்ட நான்காவது தலைமுறை ஃபதஹ்-1டி-110 ஏவுகணை, அர்மிதா லாபரேட்டரி, புன்யான் – 4 கப்பல் எஞ்சின், அராஸ் டாக்டிகல் வைகிள், வஃபா மோர்டார் லாச்சர், ஷஹீத் பொஸிஸனிங் அமைப்பு ஆகியன குறித்த அறிவிப்பை அதிபர் அஹ்மத் நஜாதின் முன்னிலையில் ராணுவம்
வெளியிட்டது.
பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அஹ்மத் வாஹிதி, செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர்ரஸா தகிபோர் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஃபதஹ்-1டி-110 நவீன கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை என்று பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். இம்மாதம் 4-ஆம் தேதி இந்த ஏவுகணை பரிசோதனைச் செய்யப்பட்டது.
ஈரானியன் ஏரோபேஸ் ஆர்கனைசேஷன், டிஃபன்ஸ் இண்டஸ்ட்ரி ஆர்கனைசேஷன்,ஆம்ட் ஃபோர்ஸஸ் ஜியோக்ராஃபிகல் ஆர்கனைசேஷன் ஆகிய நிறுவனங்களின் சாதனைகளும் நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக