கெய்ரோ:சர்வாதிகாரி பஸ்ஸாருல் ஆஸாத் அரசுக்கும், எதிர்ப்பாளர்களின் ஃப்ரீ சிரியா ஆர்மிக்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள்ள சிரியாவில் வெளிநாட்டு தலையீட்டை ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டோம் என்று எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி திட்டவிட்டமாக தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: “சிரியா பிரச்சனைக்கு அமைதியான தீர்வு ஏற்படவேண்டும் என்பதே எகிப்தின் நிலைப்பாடாகும். ஒரு புரட்சி என்ற பெயரில் சிரியா மக்கள் எதனை
விரும்புகின்றார்களோ, அந்த லட்சியத்தை அடைவதற்கு அவர்களுக்கு உதவும் வண்ணம் பிரச்சனைக்கு தீர்வை காணவேண்டும். போர் அமைதியை ஏற்படுத்தாது என்பது எல்லோரும் புரிந்துகொள்ளும் நேரம் இது. அமைதி என்பது நீதியின் அடிப்படையிலானது. அதனை தாக்குதல் மூலம் ஏற்படுத்துவது சாத்தியமாகாது. ஆனால், எங்களுடைய பிராந்தியத்தில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை அங்கீகரிக்க முடியாது. இந்த அறிக்கை பிராந்தியத்தில் உள்ள நாடுகள் உள்பட அனைவருக்கும் பொருந்தும்.
அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத் ராஜினாமாச் செய்யவேண்டும் என்பதையே சிரியாவில் உள்ள மக்கள் விரும்புகின்றார்கள்.”
இவ்வாறு முர்ஸி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக