2010 டெல்லி காமன்வெல்த் போட்டிகளுக்கு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சுரேஷ் கல்மாடி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் மீது சி.பி.ஐ இன்று மேலும் ஒரு புதிய வழக்கு பதிவு செய்துள்ளது. கல்மாடி தவிர வேறு யார் பெயர்கள் இந்த வழக்கில் இடம்பெற்றுள்ளன என்ற தகவலை தெரிவிக்க சி.பி.ஐ அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அவ்வாறு பெயர்கள் வெளியிடப்பட்டால், அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்துவதற்கு இடையூறாக இருக்கலாம் எனவும் சி.பி.ஐ அதிகாரிகள் கூறினர்.
காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்த ஊழல்கள் குறித்து, தாக்கல் செய்யப்பட்ட சுங்லு கமிட்டி அறிக்கை மீது விசாரணை நடத்துமாறு, விளையாட்டுத் துறை அமைச்சகத்துக்கு பிரதமர் அலுவலகம் மூலம் கடிதம் அனுப்பப்பட்டது. காமன்வெல்த் திட்டத்தில் பல்வேறு முரண்பாடான தகவல்கள் கூறப்பட்டிருப்பதாகவும், கல்மாடி உள்ளிட்டோருக்கு இந்த கூட்டு சதியில் தொடர்பிருப்பதாகவும் சுங்லு கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக