பெல்காம்:கர்நாடகா மாநிலம் பெல்காமில் நிகழ்ந்த வகுப்புக் கலவரத்தில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் காயம் அடைந்துள்ளார். கலவரத்தைத் தொடர்ந்து நகரில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு மஸ்ஜிதுக்கு முன்னால் பட்டாசு கொளுத்தப்பட்டது தொடர்பாக இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையில் முடிவடைந்ததாக பெல்காம் எஸ்.பி சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார். தாக்குதலில் தலையில்
காயமடைந்த 28 வயது நபர் நேற்று மரணமடைந்தார். இன்னொரு நபரின் உடலும் நகரில் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவாஜி ஜெயந்தியையொட்டி லோக்மான்யா சமூக மற்றும் கலாச்சாரம் மையம் சார்பாக நடத்தப்பட்ட போட்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் வெற்றிப்பெற்ற கும்பல் மஸ்ஜிதுக்கு முன்னால் வந்து பட்டாசுகளை கொளுத்தி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தை தட்டிக்கேட்ட வேளையில்தான் வன்முறை நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் ஆஸிஃப் மங்கோன்கர்(வயது 28) கொல்லப்பட்டார்.
நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீஸ் தெரிவிக்கிறது. மறு அறிவிப்பு வெளியாகும் வரை கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக