செவ்வாய், ஏப்ரல் 30, 2013

குடிமக்களை தாக்கும் ராணுவத்தினரை குற்றவியல் நீதிமன்றங்களும் விசாரிக்கலாம்! - உச்சநீதிமன்றம்!

நாட்டின் குடிமக்களை தாக்கும் ராணுவத்தினரை குற்றவியல் நீதிமன்றங்களிலும் விசாரணை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2010-ஆம் ஆண்டு கஷ்மீர் மாநில இளைஞர் ஒருவரை சுட்டுக் கொலைச் செய்த இரண்டு பி.எஸ்.எஃப் படை வீரர்கள் மீதான விசாரணையின் போது உச்சநீதிமன்றம் இக்கருத்தை தெரிவித்தது.

காங்கிரஸ் கட்சிக்கு மோடி பிரச்சனையே அல்ல! - திக்விஜய்சிங்!

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்த வரை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஒரு பிரச்சனையே அல்ல என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய்சிங் கூறியுள்ளார்.

‘ராமதாஸின் வேண்டுகோளை ஏற்று அவர் மீது வழக்குப் பதிவு’ - ஜெயலலிதா அறிவிப்பு!

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸின் வேண்டுகோளுக்கிணங்க அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். மரக்காணம் கலவரம் தெடர்பாக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது அவர் இதனை தெரிவித்தார்.

சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு! குற்றவாளியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான ராஜேந்திர சவுத்ரி என்ற பஹல்வானின் ஜாமீன் மனுவை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) நீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது.

திங்கள், ஏப்ரல் 29, 2013

புங்க மர விதையில் பயோ டீசல் : முஸ்லீம் மாணவிகள் சாதனை !

  • மயிலாடுதுறை :- மயிலாடுதுறை அருகே, பள்ளி மாணவியர், புங்க மர விதையில் இருந்து எடுக்கப்பட்ட பயோ டீசலை கொண்டு, கார் இன்ஜினை இயக்கிக் காண்பித்தனர்.

இ.த.ஜ. தலைவர் எஸ்.எம்.பாக்கர் - திருமாவளவன் சந்திப்பு!

  • சென்னை: கடந்த 27ம் தேதி அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம். பாக்கர், துணைத் தலைவர் முஹம்மது முனீர், பொதுச் செயலாளர் சையது இக்பால் ஆகியோரை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்துப் பேசினார்.

பாகிஸ்தானில் சிறையில் சரப்ஜித்சிங் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது எஸ்டிபிஜ கட்சி கண்டனம் !

  • பாகிஸ்தானில் சிறையில் சரப்ஜித்சிங் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது.பாகிஸ்தான் அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இந்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கண்ணூர் சம்பவம்:நீதி விசாரணை தேவை – இந்திய தேசிய லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் முஹம்மது சுலைமான் கோரிக்கை!

கண்ணூர்: கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள நாராத் என்ற பகுதியில் முஸ்லிம் இளைஞர்கள் கைதுச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை தேவை என்று இந்திய தேசிய லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் சுலைமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

கண்ணூர் சம்பவம்:குஜராத் மாடலில் அப்ரூவர்களை தேடும் கேரள போலீஸ்!

கண்ணூர்(கேரளா): கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள நாராத் என்ற பகுதியில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாத பயிற்சி மேற்கொள்வதாக கூறி கைதுச் செய்ததுடன், அங்குள்ள கட்டிடத்தில் கண்டெடுக்கப்பட்டதாக கூறி நாட்டு வெடிக்குண்டுகளையும், வாட்களையும் செட்டப் செய்து ஊடகங்களுக்கு காட்சிக்கு வைத்தது கேரள போலீஸ்.

பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பு! கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் விடுவிப்பு!

பெங்களூர் பா.ஜ.க அலுவலகம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக போலீஸ் பிடித்து சென்ற திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த முஸ்லிம் இளைஞர் அலியப்பா விடுவிக்கப்பட்டுள்ளார்.

நிஜ முகத்தை மறைக்க முகமூடியை பயன்படுத்துகிறார் நரேந்திர மோடி! : கபில் சிபல் கடும் தாக்கு!

மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகில் உள்ள பாலேவாடியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கருத்தரங்கில் பேசிய மத்திய மந்திரி கபில் சிபல் கூறியதாவது:- 

ஞாயிறு, ஏப்ரல் 28, 2013

பெங்களூர் குண்டுவெடிப்பு! கைதானவர்கள் நிரபராதிகள்! - செய்தியாளர்கள் சந்திப்பில் உறவினர்கள் !

  • பெங்களூரில் பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட நெல்லையைச் சேர்ந்த மூன்று பேரும் நிரபராதிகள் என்று அவர்களுடைய உறவினர்கள் பெங்களூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி பேட்டி !

  • நீதிமன்ற தீர்ப்பு ஸ்டெர்லைட ஆலைக்கு ஆதரவாக வந்தால் எஸ்.டி.பி.ஐ கட்சி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பெறும் போராட்டத்தை நடத்தும்.

மேலப்பாளையம் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டம் !

  • கிச்சான் புகாரி உட்பட பெங்களூர் குண்டுவெடிப்பில் கைது செய்து போலி வழக்குப் போடப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுதலை செய்யக்கோரி மேலப்பாளையம் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பாக நடந்த ஆர்ப்பாட்டம். 

சனி, ஏப்ரல் 27, 2013

பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு! முஷரஃபை ஏப்ரல் 30 வரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில், பாகிஸ்தான் இராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷரஃபை புலனாய்வுத்துறை இம்மாதம் 30-ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தமீம் அன்சாரி மீது போடப்பட்ட தே.பா., சட்டம் ரத்து!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த காய்கறி மொத்த வியாபாரியான தமீம் அன்சாரி மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

19 கி.மீ. வரை ஊடுருவியுள்ள சீனப் படைகள்! மத்திய அரசு தகவல்!

இந்திய எல்கைக்குள் சுமார் 19 கிலோ மீட்டர் தொலைவு வரை சீனப் ராணுவப் படைகள் ஊடுருவி கூடாரம் அமைத்து தங்கியுள்ளதாக, நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உ.பி., அமைச்சர் ஆஸம்கானுக்கு அமெரிக்க விமானநிலையத்தில் அவமதிப்பு!

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும், உத்தரபிரதேச அமைச்சருமான ஆஸம்கான் அமெரிக்காவின் பாஸ்டன் விமானநிலையத்தில் அந்நாட்டு அதிகாரிகளால் கடுமையான சோதனைக்கு ஆளக்கப்பட்டார்.

பாப்புலர் ஃப்ரண்ட் தொண்டர்கள் பொய்யான குற்றச்சாட்டில் கைது! கோழிக்கோட்டில் கமிஷனர் அலுவலகம் முற்றுகை!

பாப்புலர் ஃப்ரண்ட் தொண்டர்கள் கண்ணூரில் பாப்புலர் ஃப்ரண்ட் செயல் வீரர்கள் "  21 பேர் ஆரோக்கியமான மக்கள் - வலிமையான தேசம்" என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது பாப்புலர் ஃப்ரண்டின் செயல் வீரர்களை கண்ணூர் போலீசார் கைது செய்துள்ளனர். 

வெள்ளி, ஏப்ரல் 26, 2013

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை : பாகிஸ்தான் தேர்தலில் ஹிந்துக்களுக்கு "ரிசர்வ்" தொகுதிகள்!

  • மத சார்பற்ற நாடு என சொல்லிக் கொள்ளும் இந்தியாவில், முஸ்லிம்களுக்கு கல்வியில் இட ஒதுக்கீடு கொடுக்கவே தடைகள் உள்ள நிலையில்,

போலீஸ் நடவடிக்கையின் பின்னணியில் உயர் மட்ட சதி! – பாப்புலர் ஃப்ரண்ட்!

  • கேரள மாநிலம் கண்ணூரில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த 21 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்களை கைது செய்ததை தொடர்ந்து அரங்கேறும் போலீஸின் நடவடிக்கைகள் ஓரவஞ்சனையும், ஜனநாயக விரோத செயலாகும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளது.

பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவம் நடுநிலையான புலனாய்வு விசாரணை தேவை பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை !

  • கடந்த ஏப்ரல் 17ம் தேதி பெங்களூரில் குண்டு வெடித்தது. 17க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த மேடையில் நிற்க வெட்கப் படுகிறேன் ! பெரியார் ஆவணப்பட விழாவில் அமீர் !

  • பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா ? எதிர்த்தாரா ? ஆவணப்பட திரையீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் அமீர் அவர்கள் ஊடகத்தை இஸ்லாத்திற்காக பயன் படுத்துவதற்கு நமக்கு ஒரு நூற்றாண்டு ஆகி இருக்கிறது !

அப்பாவி முஸ்லிம்களை கைது செய்ததை கண்டித்து மேலப்பாளையத்தில் நாளை முழு கடை அடைப்பு!

கல்நாயக் கதாநாயகன் தீவிரவாதியா?

இந்தி படவுலகில் முடிசூடா மன்னர்களாக சுனில்தத் மற்றும் அவரது மகன் சஞ்சய்தத்  இருவரும் திகழ்ந்தார்கள். சுனில்தத் அரசியலில் இறங்கி ஓய்வு பெரும் நேரம் மகன் இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார். இவர் நடித்த கல்நாயக், ஜாஜல், சடக் போன்ற ஹிந்தி படங்கள் மிகபிரபல்யம் ஆனவை.

பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகத்தில் போலீஸ் ரெய்டு:கண்ணூரில் நடந்தது என்ன?


பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகங்களில் போலீஸ் பயங்கரவாதம்:வெட்ட வெளிச்சமான ஓரவஞ்சனை!

கோழிக்கோடு: கண்ணூர் மாவட்டத்தில் உள்ள நாராத் என்ற பகுதியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகத்தில் ‘ஆரோக்கியமான தேசம்!ஆரோக்கியமான சமூகம்!’ என்ற பிரச்சாரத்திற்கான பயிற்சி முகாமில் கலந்துகொண்டவர்களை ஆயுத பயிற்சி மேற்கொள்கின்றார்கள் என்று அவதூறாக சித்தரித்து அவர்கள் மீது UAPA(சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்) சட்டத்தின் படி வழக்கு தொடர்ந்து கைதுச் செய்தது கேரள மாநில

பெங்களூர் குண்டுவெடிப்பு கைது! முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்! (படங்கள் இணைப்பு)

பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து நெல்லையில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

வியாழன், ஏப்ரல் 25, 2013

வன்முறையின் மூலம் மக்களை மிரட்டி முழு அடைப்பை நடத்திய பா.ஜ.க!அரசு பேருந்துகள் சேதம்!

  • குமரி மாவட்ட பா.ஜ.கவின் மூத்த தலைவரும், மாநில செயற்குழு உறுப்பினருமான எம்.ஆ.காந்தி தாக்கப்பட்ட சம்பவத்தை காரணம் காட்டி,

இஸ்லாமியர்களே பிரதமராக வருவர்: பாஸ் கட்சி !

  • கோலா பேராங்: மலேசியாவில் மே 5ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் வென்று எதிர்க்கட்சி ஆட்சியமைத்தால் நாட்டின் பிரதமராக இஸ்லாமியர் வருவதையே தங்கள் கட்சி வரவேற்கிறது என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளது மலேசியாவின் முக்கிய எதிர்க்கட்சியான பாஸ் கட்சி என்னும் மலேசிய இஸ்லாமிய கட்சி.

மலேசியாவில் தேர்தல் பிரசாரத்தின் போது குண்டு வெடித்தது !

  • மலேசிய தேர்தல் களம் வன்முறைக் களமாக மாறி வருகிறது. கிட்டத்தட்ட 400 வன்செயல் சம்பவங்கள் நடந்திருப்ப தாகவும் பலர் கைது செய்யப்பட்டு வரு வதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

பேஸ்புக்கில் விளம்பரம் செய்து பச்சிளம் குழந்தை ரூ.8 லட்சத்துக்கு விற்பனை அதிர்ச்சியில் மக்கள் !

  • பேஸ்புக் மூலம் பச்சிளம் குழந்தையை ரூ.8 லட்சத்துக்கு விற்ற தாத்தா உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

குவாண்டனாமோ சிறையில் வலுவடையும் உண்ணாவிரதப் போராட்டம்!

  • பிரசித்திப் பெற்ற அமெரிக்க சிறைக்கூடமான குவாண்டனாமோவில் நடத்தும் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறையில் நடக்கும் கொடூர சித்திரவதைகளுக்கு எதிராக உணவு, பானங்களை துறந்து 52 கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினர்.

தமிழக முஸ்லிம் இளைஞர்கள் கைது! இஸ்லாமிய இயக்கங்கள் எதிர்ப்பு!

பெங்களூர் குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழகத்தில் வாழும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுவதை நிறுத்தவேண்டும் என தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா மரணம்!

புதுடெல்லி:உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா (வயது80), டெல்லியில் நேற்று(திங்கள்கிழமை) மரணமடைந்தார். கல்லீரல் செயலிழப்பு காரணமாக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை குர்காவ்னில் உள்ள மேதாந்தா மெடிசிட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு 9.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஹஜ் பயணம் - 2701 பேர் குலுக்கல் முறையில் தேர்வு!

சென்னை: தமிழ் நாட்டிலிருந்து இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள்  ஹஜ் கமிட்டி  மூலம்  2, 701 பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். மேலும் 936 பேர் சிறப்பு தகுதியில் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான குலுக்கல் 23.04.2013 செவ்வாய்க்கிழமை பிற்பகல் சென்னை இராயப்பேட்டை புதுக்கல்லூரி வளாகத்திலுள்ள ஆணைக்கார்அப்துல் சுக்கூர் கலையரங் கில் நடைபெற்றது.

அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு: ஹிந்துத்துவா தீவிரவாதி குற்ற ஒப்புதல் வாக்குமூலம்!

புதுடெல்லி: 2007-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவில் நடந்த குண்டுவெடிப்பை நடத்தியது தாங்கள்தாம் என்பதை ஹிந்துத்துவா தீவிரவாதி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளான். கடந்த மாதம் டெல்லியில் வைத்து கைதுச் செய்யப்பட்ட குஜராத்தைச் சார்ந்த பவேஷ் பட்டேல் ஜெய்ப்பூரில் மாஜிஸ்ட்ரேட் நீதிபதி முன்பாக குண்டுவைத்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான்.

புதன், ஏப்ரல் 24, 2013

தென்கொரிய அமைச்சருக்கு மர்ம பார்சல்! : வடகொரியாவின் மிரட்டலா?

தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் கிம் க்வான்-ஜின்னுக்கு மர்மப் பொடியுடன் கூடிய மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் கிம்-க்வான் ஜின்னுக்கு நேற்று மர்ம பார்சல் ஒன்று வந்தது.

ஹெலிகாப்டர் ஊழல் விவகாரம்! முன்னாள் விமானப்படை தளபதி வங்கிக் கணக்கு முடக்கம்!

ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி.தியாகியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இத்தாலி நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதில் தரகர்கள் மூலமாக 3600 கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியதாக தியாகி உள்ளிட்ட 13 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

பிரான்ஸ் தூதரகம் மீது தாக்குதல்!

லிபியா நாட்டின் தலைநகர் திரிபோலியில் பிரான்ஸ் தூதரகம் மீது கார் குண்டு மூலம் தாக்குதல்நடத்தப்பட்டது. இதில் இருவர் காயமடைந்தனர். லிபியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் பென்காசி நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதன் பிறகு மீண்டும் லிபியாவில் வெளிநாட்டு தூதரகம் மீது தாக்குதல் நடந்துள்ளது. தலைநகர் திரிபோலியில் கர்காரஷ் பகுதியில் 2 மாடி கட்டிடத்தில் பிரான்ஸ் தூதரகம் செயல்படுகிறது. இந்த அலுவலகம் மீது நேற்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கார் குண்டு மூலம் தாக்குதல் நடத்தினர்.

இந்திய வான்வெளியில் பறந்ததா சீன ஹெலிகாப்டர்? எல்லையில் பரபரப்பு!

இந்திய நிலப்பரப்புக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவி முகாம் அமைத்துள்ளதாக வந்த செய்தி அடங்குவதற்குள், இந்திய வான்வெளியில் சீன ஹெலிகாப்டர்களும் பறந்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

மலேசியா: தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் நஜிப் !

  • மலேசியாவில் தேர்தல் நெருங்கும் வேளையில் பிரதமர் நஜிப் துன் ரசாக் தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். சாபா மாநிலத்தில் உள்ள கோலா பென்யு நகருக்கு நஜிப் வருகையளித்தபோது அவரின் ஆதரவாளர்கள் அவரை வரவேற்றனர்.

பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கு அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது கண்டிக்கத்தக்கது எஸ்டிபிஜ கண்டனம் !

பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கு அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது கண்டிக்கத்தக்கது வழக்கை சி.பி.ஐ க்கு மாற்ற வேண்டும்.
இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்

செவ்வாய், ஏப்ரல் 23, 2013

முஸ்லிம்களும் ஆயுதம் எடுப்பார்கள்: ஆசாத் சாலி ஜூனியர் விகடனுக்கு பேட்டி !

  • முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டே செல்லுமாயின் ஒரு கட்டத்தில் முஸ்லிம்களும் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏற்படலாம் என கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி இந்தியாவின் ஜூனியர் விகடன் சஞ்சிகைக்கு தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூருடனான அணுக்கமான உறவை மேலும் வலுப்படுத்தும் இந்தோனீசியா- சிங்கப்பூர் பேச்சு !

சிங்கப்பூருடனான அணுக்கமான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் சிங்கப்பூர்  வந்துள்ள இந்தோனீசிய அதிபர் சுசீலோ பம்பாங் யுதயோனோ நேற்று மாலை சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்துப் பேசினார். 

திங்கள், ஏப்ரல் 22, 2013

இலங்கைக்கான தூதரை தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை இந்திய தூதராக நியமிக்க வேண்டும் !

  • தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை இலங்கைக்கான இந்திய தூதராக நியமிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நாள்தோறும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுகின்றனர். 

வடகொரியா மேலும் 2 ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது!: அலறும் தென்கொரியா!

கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடலோரப் பகுதியில் வடகொரியா மேலும் இரண்டு ஏவுகணைகளை நிலை நிறுத்தியுள்ளதாக தென்கொரியா கூறியுள்ளது. ஏற்கனவே நிலை நிறுத்தி வைத்துள்ள அணு ஆயுத ஏவுகணையை, வடகொரியாவின் நிறுவனர் கிம் ஈ சுங்கின் பிறந்த நாளான ஏப்ரல் 15ம் திகதி அன்று வட கொரியா ஏவும் என்று தென்கொரியாவால் எதிர்பார்க்கப்பட்ட தாக்குதல் பொய்த்துப் போனது.

சிரியா: அதிபர் படையின் தாக்குதலில் 80 பேர் பலி!

சிரியாவில் அதிபர் ஆசாத் படைக்கும், போராளிகள் படைக்கும் இடையே கடந்த இரு வருடங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் சண்டையில் 70,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.இந்நிலையில் ஜியாடெட் அல் பத்ல் என்ற நகரை சுற்றி வளைத்து அதிபர் படை தாக்குதல் நடத்தினர்.  கடந்த 5 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த மோதலில் போராளிகளின் படை மிகப்பெரும் சேதத்தை சந்தித்தது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட போராளிகள் 80 பேர் கொல்லப்பட்டனர். 

பர்மா கலவரத்தைத் தடுக்கத் தவறிய பொலிஸார்!!

பர்மாவில் கடந்த மாதம் முதல் முஸ்லிம்களுக்கும் புத்தமதக் கலவரக்காரர்களுக்கும் இடையே வன்முறை நடந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் அங்குள்ள மெய்திலா நகரில் உள்ள குறைவாக வசிக்கும் முஸ்லிம்கள் மீது புத்தமதக்கலவரக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

டெல்லியில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 393 பாலியல் புகார்கள் !

நாட்டின் தலைநகரான டெல்லி தற்போது பாலியல் பலாத்கார சம்பவங்களின் தலைநகராவும் உருவெடுத்திருக்கிறது. கடந்த 3 மாதங்களில் மட்டும் 393 பாலியல் புகார்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக டெல்லி காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் ராஜன்பகத் தெரிவித்துள்ளார்.