திங்கள், செப்டம்பர் 30, 2013

உபி: மீண்டும் ப.ஜ.க கலவரம்.

மீரட் : முஸஃப்பர்நகர் கலவரத்தை தூண்டிவிட்டதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் சங்கீத்சோம் என்பவர் உ.பி மாநில காவல்துறையால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதாகியிருந்தார். கடந்த ஞாயிறன்று அவருடைய கைதுக்கு எதிராக மீண்டும் ஆர்ப்பாட்டமும் கலவரமும் செய்ததில் மேலும் ஒருவர் இன்று பலியாகியுள்ளார்.

அப்பாவி முஸ்லிம்களை கைது செய்யும் காவல் துறை அதிகாரிகளின் மீது கடும் நடவடிக்கை- உள்துறை அமைச்சர் ஷிண்டே!

டெல்லி: எந்த அப்பாவி முஸ்லிம்களையும் கைது செய்யக் கூடாது என்று மாநில முதல்வர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே அறிவுரைக் கடிதம் அனுப்பியுள்ளார்.

அகதிகளாக்கப்பட்ட முஸாஃபர்நகர் மக்கள் மீது வனம் அபகரிப்பு வழக்கு!

புதுடெல்லி: உ.பி., முஸாஃபர் நகரில் ஏற்ப்பட்ட கலவரத்தால் அகதிகளாக்கப்பட்டு காட்டுப் பகுதிகளில் அபயம் தேடிய மக்கள் மீது வனம் அபகரிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கலவரத்தில் பாதிக்கப்பட்டு உற்றார்களையும், உறவினர்களையும் இழந்து வன்முறை யாளர்களிடமிருந்து தப்பிக்க அருகிலுள்ள ஷாம்லி மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியான மலக்பூரில் அபயம் தேடிய முஸ்லிம்கள் மீது அரசு வழக்கை பதிவுச் செய்துள்ளது. அரசு புள்ளிவிபரப்படி 10 ஆயிரம் பேர் இப்பகுதியில் அபயம் தேடியுள்ளனர்.

வி.ஹெச்.பி.யை புறக்கணித்துவிட்டு தனியாக விவேகானந்தரின் பிறந்தநாள் விழாவை கொண்டாட உலக மத பாராளுமன்றம் முடிவு!

ஷிக்காகோ: சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் விழாவை தனியாக கொண்டாட உலக மத பாராளுமன்ற அமைப்பு (சி.பி.டபிள்யூ.ஆர்.) முடிவு செய்துள்ளது.

ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் விழுந்து பலியாவதை தடுக்க சுப்ரீம் கோர்ட்டின் அறிவிப்பை தமிழக அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 4 வயது சிறுமி தேவி நேற்று 28.09.2013 அன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து பலியாகிவிட்ட செய்தி மிகவும் வருத்தத்திற்குரியது அச்சிறுமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அச்சிறுமியை மீட்பதற்காக 10 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது போராடிய தீயணைப்பு வீரர்களுக்கும் , மருத்துவ குழுவிற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

உயிரோடிருக்கும் அமைச்சர், எம்.எல்.ஏ. இறந்ததாக சான்றிதழ்! -மதுரை மாநகராட்சியின் அவலம்!

மதுரை: உயிரோடு இருக்கும் தமிழக அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் இறந்து விட்டதாக மதுரை மாநகராட்சி சார்பில் இறப்புச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சனி, செப்டம்பர் 28, 2013

ஹரியானா: ஜாட் சாதி வெறிக்கு பலியான இளம் தம்பதியினர்...

ரியானா மாநிலம் ரோத்தக் மாவட்டத்திற்கு அருகில் உள்ள கர்னவதி என்ற கிராமத்தை நோக்கி அந்த வாகனம் வருகிறது. அதில் அழைத்து வரப்படுபவர்கள் தர்மேந்தர் (23), நிதி (20). ரோத்தக் நகரத்தில் ஐ.டி.ஐ படிக்கும் தர்மேந்திராவும், நுண்கலை பயிலும் நிதியும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார்கள். ஒரே கோத்திரத்தை சார்ந்தவர்கள் தங்களுக்குள் திருமணம் செய்துகொள்ள கூடாது என்ற காப் பஞ்சாயத்தின் உத்தரவு இவர்களுக்கு தடையாக இருந்த்தால் கடந்த செவ்வாய் அன்று ஊரை விட்டு ஓடி டெல்லி சென்று திருமணம் செய்து கொண்டார்கள்.
நிதியின் பெற்றோர்
ரோத்தக் மாவட்ட நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்படும் நிதியின் பெற்றோர்.
புதன் காலையில் நிதியை தொடர்புகொண்ட அவரது பெற்றோர் இவர்களை சேர்த்து வைப்பதாகவும், எந்த தீங்கும் செய்யமாட்டோம் என்று கூறிய உறுதிமொழியை அடுத்து பெற்றோரால் அனுப்பி வைக்கப்பட்ட வாகனத்தில் தற்போது ஊருக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். வரும் வழியில் தாபாவில் உணவு வாங்கி கொடுத்து வெகு இயல்பாக, எந்த சலனமும் இல்லாமல் அவர்கள் டெல்லியிலிருந்து அழைத்துவரப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் கிராமத்தை நெருங்குகிறார்கள்.

தமிழ் நாட்டைவிட பின்தங்கிய மாநிலம் குஜராத்... ரகுராம் ராஜன் குழு...

ரகுராம் ராஜன்
2013 மே மாதத்தில் முதன்மை பொருளாதார ஆலோசகராக பணியாற்றியவரும், தற்போதய ரிசர்வ் வங்கியின் கவர்னருமான  ரகுராம் ராஜனை தலைவராக கொண்ட 6 பேர் குழுவினது ஆய்வின் படி பொருளாதார வளர்ச்சியில் கோவா, கேரளா, தமிழ்நாடு மாநிலங்கள் முதல் இடங்களிலும், ஒடிசா, பீகார், மத்திய பிரதேச மாநிலங்கள் கடைசி இடங்களிலும் உள்ளன.
சரி, அப்படியானால் மோடியின் குஜராத்? இந்த ஆய்வு “குஜராத் மாடலையும்”, “வைபரண்ட் குஜராத்தையும்” உலகமே தரிசிக்கும்படி செய்துள்ளது. குஜராத்தின் ஓட்டைகளை மறைத்து வளர்ச்சியை நிலைநாட்டி விடலாம் என்று ஊடகங்களும் பேஸ்புக் போராளிகளும் எவ்வளவு முயன்றாலும் சில சமயம் இது போன்ற ஆய்வுகள் அவர்களை சந்தி சிரிக்க வைத்து விடுகின்றன.

வெள்ளி, செப்டம்பர் 27, 2013

கற்பழிப்பு வழக்கு: பா.ஜனதா கட்சி தலைவருக்கு ஆயுள் தண்டனை...

டேராடூன்,உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டம் பிரேம் நகரை சேர்ந்த ஒரு தலித் இளம் பெண்ணை, வேலைவாங்கித் தருவதாக ஏமாற்றி அழைத்துச் சென்று உள்ளூர் பாரதீய ஜனதா கட்சி தலைவர் பிரமோத் குப்தா மற்றும் அசோக் குமார் உள்பட 3 பேர் கற்பழித்ததாக புகார் கூறப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட கோர்ட்டு, பா.ஜனதா தலைவர் பிரமோத் குப்தாவுக்கு ஆயுள் தண்டனையும் அசோக் குமாருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறியது. போதுமான சாட்சியங்கள் இல்லாததால் 3–வது குற்றவாளி பிரவீன் விடுதலை செய்யப்பட்டார்.

திங்கள், செப்டம்பர் 23, 2013

திருச்சி: சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு அறிவிக்கப்படாத விடுமுறை கொடுக்கும் காவல்துறை..

திருச்சியில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிக்காக நரேந்திரமோடி மற்றும் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜகவினர் எதிர்வரும் 26-09-2013 அன்று வரவிருப்பதையொட்டி, அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனால் திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஜமால் முகம்மது, MIET ஆகிய சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணாக்கர்களை, மோடி வந்து சென்ற பிறகு வகுப்புக்கு வந்தால் போதும் என்று வாய்வழி உத்தரவை திருச்சி காவல்துறை விடுத்துள்ளதால் மாணவர்கள் கொதித்துப் போயுள்ளனர். சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களைக் குறி வைத்து இத்தகைய உத்தரவு பிறப்பித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
 

துனீஷியப் பெண்களைக் குறித்து இழிவாகப் பரப்பப்படும் செய்திக்கு மறுப்பு....

செக்ஸ் ஜிஹாத் என்ற பெயரில் துனீஷியப் பெண்களைக் குறித்து இழிவாகப் பரப்பப்படும் செய்திக்கு மறுப்பு வெளிவந்துள்ளது. சிரியாவில் 

நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் சிரியப் போராளிகளுக்கு  பாலியல் சுகம் அளிக்க துனீஷியாவிலிருந்து பெண்கள் செக்ஸ் ஜிஹாத் என்ற பெயரில் புறப்பட்டுச் செல்வதாக, தமிழ் ஊடகங்கள் உட்பட சில இந்தி மற்றும் ஆங்கில ஊடகங்களில்,   வதந்திகளை அடிப்படையாகக் கொண்ட செய்திகள் வெளியிடப்பட்டன. 

அப்பெண்கள் பல போராளிகளுடன் பாலியல் உறவு கொண்டு கர்ப்பமுற்றுத் திரும்புவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அவை உண்மைக்குப் புறம்பானவை என்றும் அப்படி ஏதும் நிகழவில்லை என்றும், சிரிய தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

லுத்ஃபி பின் ஜாது எனும் துனிஷிய உள்துறை அமைச்சர் பெயரால் இச்செய்திகளை மேற்கத்திய ஊடகங்கள் பரப்பி வருவதாகவும், அவை உண்மையல்லாதவை என்றும், அதே வேளை, சில போராளிகளின் குடும்பத்தினர் தம் குடும்பத்துடன் இணைவதற்காக சிரியா சென்றுள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற கருப்பையை வாடகைக்கு விடும் குஜராத் இளம் பெண்கள்...

வாடகைத் தாய்மார்கள்ருபத்து நான்கு மணி நேரமும், தடையில்லா மின்சாரம், மாநிலம் முழுவதும் தண்ணீர் விநியோகம், அபரிமிதமான விவசாய வளர்ச்சி, வந்து குவியும் அந்நிய முதலீடுகள், அவை உருவாக்கும் இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் என மோடியின் குஜராத் குறித்து பொய்யானதொரு பிம்பம் உருவாக்கப்படுகின்றது. இவற்றுக்கு மத்தியில் குஜராத் குறித்த உண்மைச் செய்திகளும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அம்மாநில அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படியே கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் குஜராத்தில் வறுமைக் கோட்டுக்குக்  கீழ்  உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 39.06% அதிகரித்துள்ளது.  கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியில் தமிழ்நாடு, ஆந்திராவிற்குப் பின்னால் இந்தியாவிலேயே 11வது இடத்தில் குஜராத் இருக்கிறது.

ஞாயிறு, செப்டம்பர் 22, 2013

இளந்தாமரை மாநாடு: திருச்சியில் பாஜகவுக்கு சவால் விடும் ம.க.இ.க.

திருச்சி: வருகிற 26ஆம் தியதி திருச்சியில் பாஜகவால் இளந்தாமரை மாநாடு நடத்தப்பட இருக்கிறது. இம்மாநாட்டை தடுத்து, கலவரத்தை தூண்டும் வகையில் நகர் முழுவதும் ஒட்டப்படும் சுவரொட்டிகள் மற்றும் விநியோகிக்கப்படும் துண்டுப் பிரசுரங்களை காவல்துறை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறி இருந்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய மக்கள் கலை இலக்கியக் கழக இணைப் பொதுச்செயலர் காளியப்பன், பாஜகவினருக்கு தைரியமிருந்தால், எங்களது சுவ்ரொட்டிகள் / துண்டு பிரசுரத்தில் இருக்கும் குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் மறுத்து அறிக்கை விடட்டும். அதற்கு திராணி இல்லாமல், காவல்துறையினரிடம் பொய் புகார் கொடுத்து எங்களது பிரச்சாரத்தை தடுக்க மன்றாடுகின்றனர் என்று கூறியவர், இது தொடர்பாக அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.
மோடி எதிர்ப்பு இயக்கத்துக்காக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய 
கலைக்குழு தயாரித்து, மக்களிடையே பாடி வரும் பாடலின் ஒலிப்பதிவு...
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு:

இந்திய வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்த்தும் பாடல்....

தேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல். நாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.
பாபர், தன் மகன் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற உயிலில் சொல்கிறார். ‘அருமை மகனே, வகை வகையான மதங்களை பின்பற்றுபவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். நீ உனது மனதை குறுகிய மத உணர்வுகள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்து சேதப்படுத்தக் கூடாது. பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.’ இது பாபர் தன் கைப்பட எழுதிய உயில். அர்ஜூனனுக்கு கண்ணன் செய்த கீதோபதேசம் போல புராணக் கட்டுக்கதை அல்ல. எனினும் அந்த பாபர்தான் கோயிலை இடித்ததாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.

பழங்களை வீசி பெண்களை தேர்வு செய்யும் சாமியார்!

புதுடெல்லி: சர்ச்சை சாமியார் ஆஸ்ரம் பாபு, அவருக்கு விருப்பமான பெண்களை தேர்வு செய்ய பெண்கள் மீது பழங்களை வீசுவார் என்று அவரது உதவியாளர் கூறியுள்ளார்.
ஆஸ்ரம் பாபுவின் ஆசிரமத்தில் தங்கிப் படித்த 16 வயது சிறுமியிடம் தவறாக நடந்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஆஸ்ரம் பாபு சாமியார் குறித்து அவரது உதவியாளர் சாவ்லா பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதாவது, ஆஸ்ரம் பாபு தனக்கு பிடித்த பெண்கள் மீது பழம் அல்லது பிரசாதத்தை வீசி. அல்லது அந்த பெண் மீது டார்ச் லைட்டை அடித்து தேர்வு செய்துள்ளார். மேலும் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்றும் அவரால் ஓபியம் சாப்பிடாமல் இருக்க முடியாது என்றும் சொல்லப்படுகிறது. வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் தான் அவருக்கு ஓபியம் சப்ளை செய்து வந்துள்ளார்.
மேலும், ஆஸ்ராம் பாபுவின் மகன் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறி வருகிறார். ஆனால் அவருக்கு ஒரு குழந்தை இருப்பதாக சாவ்லா தெரிவித்துள்ளார்.

உலக கைப்பந்து தகுதி சுற்று: இந்திய அணிக்கு 2-வது வெற்றி

உலக கைப்பந்து தகுதி சுற்று: இந்திய அணிக்கு 2-வது வெற்றி
சென்னை, செப்.22- உலக கோப்பை ஆண்கள் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த ஆண்டு போலந்து நாட்டில் நடக்கிறது. இதற்கான ஆசிய தகுதி சுற்று இறுதி ரவுண்டின் ‘சி’ பிரிவு போட்டிகள் சீனாவின் சென்சோவ் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 2-வது நாளான நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி, சீன தைபேயை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 25-19, 21-25, 25-18, 26-24 என்ற செட் கணக்கில் சீன தைபேயை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி, சவூதி அரேபியாவை வென்று இருந்தது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, சீனாவை சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.

தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளியை கற்பழித்த டாக்டரின் ஆயுள் தண்டனையை ஐகோர்ட்டு உறுதி செய்தது

மும்பை, செப். 22- மராட்டிய மாநிலம் தானே அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஜனவரி 28–ந்தேதி பெண் ஒருவர் பொது வார்டில் அனுமதிக்கப்பட்டார். இரவு பணிக்கு வந்த டாக்டர் விஷால் வான்னே, அந்த பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறி அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றினார். 

அங்கு அவருக்கு மயக்க ஊசி போட்டு அவரை கற்பழித்தார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் டாக்டர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு அங்குள்ள விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டாக்டர் விஷால் வான்னேவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் மும்பை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். 

ஆனால் டாக்டர் விஷால் வான்னேவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு, அவரது ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.


துருக்கி நாட்டில் போலீஸ் தலைமையகம் மீது ராக்கெட் வீச்சு

துருக்கி நாட்டில் போலீஸ் தலைமையகம் மீது ராக்கெட் வீச்சு
அங்காரா, செப். 22- 

துருக்கியில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தலைநகர் அங்காராவில் போலீஸ் தலைமையகம் மீது அடுத்தடுத்து மூன்று ராக்கெட் வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. 

இந்த ராக்கெட் வீச்சில் போலீஸ் தலைமையகத்தின் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. அதே நேரத்தில் உயிர்ப்பலி ஏதும் நேரிட்டதாக தகவல் இல்லை. இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

சனி, செப்டம்பர் 21, 2013

ஆப்கானிஸ்தானிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யும் இந்தியா!

வெங்காயத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருப்பதால் அதனை மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது தொடர ஆரம்பித்துள்ளது. பஞ்சாபைச் சேர்ந்த வியாபாரிகளும் அமிர்தசரஸ் அருகே உள்ள அடாரி-வாகா சாலை இணைப்பு வழியாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெங்காயத்தை வரவழைத்துள்ளனர்.

34 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா, ஈரான் அதிபர்கள் சந்திப்பு! ஈரான் மீதான பொருளாதார தடை நீக்கமா?:

வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஈரான் அதிபர் ஹசன் ரப்பானி ஆகியோர் நியூயார்க்கில் சந்தித்து பேச இருக்கிறார்கள். இரு நாட்டு அதிபர்களும் 34 ஆண்டுக்கு பிறகு முதல் தடவையாக சந்திப்பதால் நல்லுறவு மீண்டும் மலர வாய்ப்பு உருவாகும் என கருதப்படுகிறது. ஈரான் ரகசிய அணு உலை மூலம் ஆயுதம் தயாரிப்பதாக மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. 

முஸாஃபர் நகர்: அகிலேஷ் யாதவிடம் பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்கள் மனு!

புதுடெல்லி: முஸாஃபர் நகர் கலவரத்தின் பின்னணியில் செயல்பட்டவர்கள் மற்றும் கலவரத்தை தூண்டிய அனைத்து அரசியல் கட்சி மற்றும் சமுதாய தலைவர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர்கள் உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு மனு அளித்துள்ளனர்.

அமெரிக்காவில் வேகமான வளர்ச்சியை நோக்கி இஸ்லாம்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஸ்பானிஷ் வம்சாவழியினர் மத்தியில் இஸ்லாத்தின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான ஹிஸ்பானிக்குகள் இஸ்லாத்தை தழுவியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் 2006-ஆம் ஆண்டு வெளியிட்ட புள்ளிவிபரப்படி ஹிஸ்பானிக் முஸ்லிம்களின் எண்ணிக்கை ஒரு லட்சமாகும்.

முஸாஃபர் நகர் : கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்கள் நேரில் சந்திப்பு!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் K.M.ஷெரிப் அவர்கள் தலைமையிலான பிரதிநிதிகள் குழு செப்டம்பர் 16 அன்று, உத்திரபிரதேசம் மாநிலம் முஸாஃபர் நகர் மாவட்டத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டு தங்கள் இருப்பிடங்களை விட்டு பிற கிராமங்களில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்தனர். 

வெனிசுலா அதிபர் அமெரிக்க வான்வெளியில் பறக்கத் தடை!

மறைந்த ஹ்யூகோ சாவேஸ்ஸுக்குப் பின்னர் வெனிசுலா நாட்டின் அதிபராகப் பொறுப்பு வகிப்பவர் நிகோலஸ் மதுரா. வெனிசுலா நாட்டுக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கிடையே காணப்படும் பகைமை காரணமாக வெனிசுலா அதிபரின் விமானம் பியூட்டாரிகோ வான்வெளியில் பறப்பதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பா.ஜ.கவில் மீண்டும் சேரப்போவதில்லை: எடியூரப்பாவின் முடிவில் மாற்றம்!

பெங்களூர்: பாஜகவில் மீண்டும் சேரப் போவதில்லை என்று, கர்நாடக முன்னாள் முதல்வரும், கர்நாடக ஜனதா கட்சித் தலைவருமான எடியூரப்பா தெரிவித்தார்.பெங்களூரு கனரா யூனியன் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கஜக செயற்குழுக் கூட்டத்தை குத்துவிளக்கேற்றித் தொடக்கிவைத்து அவர் பேசியது:

வெள்ளி, செப்டம்பர் 20, 2013

பங்காளதேஷில் வன்முறை நீடிப்பு: ஒருவர் பலி!

பங்களாதேஷில் ஜமாஅத்தே இஸ்லாமி தலைவருக்கு மரணத்தண்டனை அளித்து வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பால் எழுந்த எதிர்ப்பு வங்காள தேசத்தில் தொடருகிறது. எதிர்ப்பின் 2-வது நாளான நேற்று போலீசுக்கும், அந்த அமைப்பின் உறுப்பினர்களுக்கும் இடையே மோதல் நிலவியது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார்.

‘மோடி பிரதமரானால் இந்தியாவில் மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டும்!’ - எழுத்தாளர் அனந்தமூர்த்தி..

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமரானால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ வேண்டும் என்று, ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்த்மூர்த்தி தெரிவித்தார். பெங்களூரில் கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற கன்னட எழுத்தாளர் பரகூர் ராமசந்திரப்பாவின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி, நரேந்திர மோடி பிரமரானால் இந்தியாவில் வாழமாட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

பாட்லா ஹவுஸ் என்கவுண்டருக்கு நீதி வேண்டி மாணவர்கள் பேரணி!

பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர் நடந்து 5 ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் ஜாமிஆ மில்லியா பல்கலைக் கழகம் நோக்கி பேரணி நடத்தினர். முஸ்லிம் வேட்டையை நிறுத்துங்கள்! அரச பயங்கரவாதத்தை நிறுத்துங்கள்! உள்ளிட்ட முழக்கங்களை பேரணியில் கலந்துகொண்டவர்கள் எழுப்பினர்.

செவ்வாய், செப்டம்பர் 17, 2013

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி: வெள்ளி பதக்கம் வென்றார் இந்திய வீரர் அமித் குமார்!

ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்ட்டில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டியில் இந்திய வீரர் சுஷில்குமார் உள்பட 22 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது.

‘ராமர் பாலத்தை புராதான சின்னமாக அறிவிக்க இயலாது!’ - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு!

தமிழகத்தின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கப்போகும் சேது சமுத்திரத் திட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனுதாக்கல் செய்துள்ளது.

அமெரிக்க கடற்படை தளத்தில் துப்பாக்கி சூடு !!!

அலெக்சிஸ் ஆரோன்
நேற்று 16.9.2013 அமெரிக்க நேரப்படி காலை சுமார் 8.20 மணிக்கு தலைநகர் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க கடற்படை தலைமையகக் கட்டிடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர், 8 பேர் காயமடைந்தனர். அலெக்சிஸ் ஆரோன் என்ற இளைஞர் 5 ஆண்டுகளாக கடற் படையில் மூன்றாம் கிரேடு, கடைநிலை ஊழியராக பணி புரிந்து, 2011-ல் விடுவிக்கப்பட்டார். அவர் இப்போது அமெரிக்க கடற்படையின் கணினி அமைப்பை பராமரிக்கும் ஒப்பந்தத்தை பெற்றுள்ள எச்பி (ஹியூலெட் பாக்கார்ட்) நிறுவனத்தின் உப ஒப்பந்ததாரர் “தி எக்ஸ்பர்ட்ஸ்” நிறுவனத்தில் வேலை செய்கிறார். கடற்படையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட அனுமதி அட்டை அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. கடற்படை

சனி, செப்டம்பர் 14, 2013

சிறை நிரப்பும் போராட்டம் ஏன்? பத்திரிகையாளர் சந்திப்பில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர்!

தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்தும், அநீதிகளைக் கண்டித்தும் எதிர்வரும் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை மாநிலம் தழுவிய தொடர் பிரச்சாரமும் நிறைவாக அக்டோபர் 6 ஆம் தேதி அன்று சென்னை, மதுரை ஆகிய இரு இடங்களில் சிறைநிரப்பு போராட்டத்தையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தவுள்ளது.

விண்வெளியில் கீரைகளை பயிரிட திட்டம்! நாசா அதிரடி

விண்வெளி வீரர்களின் உணவுக்காக கீரைகளை பயிரிட நாசா திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வுக் கூடத்தை அமைத்து வருகின்றன. இதில் பணிபுரிவதற்காக விண்வெளி வீரர்கள் சென்று வருகின்றனர், இந்த வீரர்களுக்கு விசேட உணவு தயாரித்து வழங்கப்படுகிறது.

வளைகுடாவுக்கு அடுத்த உலகின் மாபெரும் எண்ணெய் கிணறு..


வளைகுடா நாடுகளுக்கு அடுத்தபடியாக உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் படுகையில் கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. இந்த எண்ணெய் படுகை சோவியத் யூனியனில் இருந்து தனி நாடான கஜாகிஸ்தானின் அருகே கேஸ்பியன் கடலில் உள்ளது. கஸாகான் ஆயில் பீல்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் பகுதியில் 13 பில்லியன் பேரல்கள் அளவுக்கு கச்சா எண்ணெய் இருப்பதாகத் தெரிகிறது.

திருக்குர்ஆனுக்கு தீ வைக்க முயன்ற கிறிஸ்தவ பாதிரியார் கைது!

ஃப்ளோரிடா: முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆனை தீ வைத்துக் கொளுத்த முயன்ற அமெரிக்க பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதன் நினைவு தினத்தையொட்டி மூவாயிரம் திருக்குர்ஆன்  பிரதிகளை தீவைத்துக் கொளுத்த முயன்ற சச்சைக்குரிய அமெரிக்க கிறிஸ்தவ பாதிரியார் டெர்ரி ஜோன்ஸை ஃப்ளோரிடா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வெள்ளி, செப்டம்பர் 13, 2013

டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு!

டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வன்முறை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்கி டெல்லி விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 16 ம் தேதி டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர், ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்து, வீசி எறியப்பட்டு, உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி, வெட்கி தலைகுனியவும் வைத்தது.

சீனாவில் 8 மாத குழந்தையின் ஆணுறுப்பை கடித்து குதறிய குரங்கு! (வீடியோ இணைப்பு)

சீனாவில் தேசிய விலங்கியல் பூங்காவில் தாயுடன் சுற்றிப் பார்க்க சென்ற 8 மாத குழந்தையின் ஆண் உறுப்பை குரங்கு ஒன்று கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.cசீனாவின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கையாங் மாகாணத்தில் கியான்லிங் தேசிய வன விலங்கியல் பூங்கா உள்ளது. தினமும் இதனை சுற்றிப் பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர்.

உலகில் தினமும் 87 கோடி மக்கள் பட்டினியால் அவதி!- அதிர்ச்சி தகவல்

மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாவதால் உலகில் தினமும் 87 கோடி மக்கள் பட்டினியால் அவதிப்படுகின்றனர். ஐ.நா.சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் சார்பில் சர்வதேச அளவில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் உலக அளவில் உற்பத்தியாகும் உணவு பொருட்கள் பெருமளவில் வீணாக்கப்படுவது தெரிய வந்தது.

200 பேருக்கு மரண தண்டனை! -பகிரங்க மன்னிப்பு கோரும் நெதர்லாந்து!

இந்தோனேசியாவில் தமது துருப்பினரால் இழைக்கப்பட்ட மரண தண்டனைகளுக்கு நெதர்லாந்து பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது. 1945 ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தில் இந்தோனேசியாவைச் சேர்ந்த 200 பேர் தூக்கிலிடப்பட்டனர். அத்துடன் நெதர்லாந்து துருப்பினரால் சுமார் 150 பேர் கொல்லப்பட்டனர்.

ஜாட் சாதி வெறியர்களோடு சங்க பரிவாரம் நடத்தும் முசாஃபர் நகர் கலவரம் !

காயமடைந்தவர்கள்
முசாஃபர் நகர் மாவட்டம் உத்திர பிரதேசத்தின் மேற்கு பகுதியில் உள்ளது. அங்கு முசுலீம்களுக்கெதிராக இந்து-ஜாட் சாதியினர் கடந்த 7-ம் தேதி முதல் நடத்தும் கலவரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 40-ஐ தாண்டி விட்டது. தற்போது தமது கிராமங்களில் இருந்து உயிர் பிழைக்க தப்பி ஓடிவரும் முசுலீம்களை நோக்கி இந்துமத வெறியர்கள் தம் தாக்குதலை துவக்கி உள்ளதால் இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. சாம்லி பகுதியில் மசூதியின் இமாம் மௌலானா உமர் தின்-ஐ கடந்த திங்கட்கிழமை சுட்டுக் கொன்றுள்ளனர்.
கலவரத்தில் காயமடைந்தவர்கள்.
இந்துமத வெறியர்களை ஒரேயடியாக பகைத்துக் கொள்ள மாநில அரசு விரும்பவில்லை. தேர்தலில் முசுலீம்கள் வாக்குகளோடு இந்துக்கள் வாக்கும் சமாஜ்வாதிக்கு வேண்டும் என்பதால் ஆகஸ்டு 27 முதல் செப்டம்பர் 9 வரை நடந்த சம்பவங்களை விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி விஷ்ணு சகாய் தலைமையில் கமிசன் ஒன்றை அகிலேஷ் யாதவ் அமைத்துள்ளார்.