
பொதுவாகவே கோடைக்காலத்தில் ஹமாஸ் முகாம்களை நடத்தினாலும், இம்முறை முகாமின் முக்கிய கருவாக ஃபலஸ்தீன் சிறைக்கைதிகள் அனுபவிக்கும் கொடுமைகள் சித்தரிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு முகாமிலும் 6 அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. முதல் அறையில் ஃபலஸ்தீன் கைதிகளை விசாரிப்பது ஆகும். இங்கு இஸ்ரேலிய ராணுவத்தின் விசாரணையை துணிச்சலாக எதிர்கொள்ளும் ஃபலஸ்தீனர்களின் உறுதியை சிறுவர், சிறுமியருக்கு வழிகாட்டி ஒருவர் விளக்குகிறார். அடுத்த அறையில் ஃபலஸ்தீன் கைதிகளிடம் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வாங்குவதற்காக அவர்களை தூண்டும் இஸ்ரேல் போலீஸின் தந்திரம் விளக்கப்படுகிறது. அதனையெடுத்து சித்திரவதைச் செய்யப்படும் அறை, தனிமைச் சிறை அறை ஆகியன உருவாக்கப்பட்டுள்ளன.
ஃபலஸ்தீன் மண்ணை காப்பாற்ற கடுமையான வேதனைகளை சகிக்கவேண்டும் என்ற பாடத்தை சிறுவர், சிறுமியருக்கு கற்றுக்கொடுப்பதே முகாமின் நோக்கம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான அஹ்மத் ரான்தீஸி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக