வெள்ளி, ஜூலை 13, 2012

நீதிமன்றத்திற்கு எதிர்ப்பு:தஹ்ரீர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் !

Egyptians return to Tahrir Square in protestகெய்ரோ:கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் நடத்த உத்தரவிட்ட எகிப்திய அதிபர் முஹம்மது முர்ஸியின் உத்தரவை உச்ச அரசியல் சாசன நீதிமன்றம் நிராகரித்ததை தொடர்ந்து உருவான அரசு-அரசியல் சாசன நெருக்கடி அதிபருக்கும், நீதிமன்றத்திற்கும் இடையே வெளிப்படையான மோதல் சூழலை உருவாக்கியுள்ளது. முர்ஸியின் உத்தரவை ரத்துச்செய்த
நீதிமன்றத்தீர்ப்பை கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் கெய்ரோ தஹ்ரீர் சதுக்கத்தில் மீண்டும் திரண்டனர். முர்ஸியின் உத்தரவின் பின்னணியில் நேற்று முன்தினம் பாராளுமன்றம் கூட்டம் நடந்த பிறகு நீதிமன்றம் முடிவை கடுமையாக்கியதை கண்டித்து முர்ஸியை ஆதரிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் தஹ்ரீர் சதுக்கத்தில் ஒன்று திரண்டனர்.
ராணுவத்திற்கும், அதிபருக்கும் இடையே அதிகார தகராறை உருவாக்கிய பாராளுமன்றத்தை மீண்டும் புனரமைத்த சம்பவம் தொடர்பான சர்ச்சை விரைவில் தீராது போலிருக்கிறது.
பாராளுமன்றம் கூட்டம் நடத்துவது தொடர்பான விவகாரத்தில் மக்கள் விருப்ப வாக்கெடுப்பை நடத்த முர்ஸி தயாராகி வருவதாக அல்ஃபஜ்ர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
முர்ஸியின் தாய் அமைப்பான இஃவானுல் முஸ்லிமீனும் இச்செய்தியை உறுதிச் செய்துள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறிய முர்ஸியின் பதவி பறிபோகலாம் என அரசியல் நோக்கர்கள் கருதினாலும், இதன் மூலம் முபாரக்கை வெளியேற்றிய மக்கள் எழுச்சி போராட்டம் மீண்டும் துவங்கிவிடும் என ராணுவம் அஞ்சுகிறது.
புதிய பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடக்கும் வரை தற்போதைய பாராளுமன்றம் அமலில் இருக்கவும், அதன் மூலம் அதிபரின் அதிகாரங்களை கவர்ந்த ராணுவத்தின் நடவடிக்கையை தாண்டுவதே முர்ஸியின் திட்டமாகும் என கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக