வெள்ளி, ஜூலை 13, 2012

யெமனில் குண்டுவெடிப்பு: 22 பேர் பலி !

22 killed in attack on Yemen police academyஸன்ஆ:யெமன் நாட்டின் தலைநகர் ஸன்ஆவில் உள்ள போலீஸ் அகாடமியின் நுழைவாயிலில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 22 பேர் பலியானார்கள். ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலின் பொறுப்பை இதுவரை எவரும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் அப்து ரப்
மன்சூர் ஹாதி யெமன் அதிபராக பதவியேற்ற பிறகு நடைபெறும் 2-வது பெரிய தாக்குதலாகும் இது. யெமனில் அல்காயிதா போராளிகளை ஒழிப்பேன் என மன்சூர் பதவியேற்றவுடன் சூளுரைத்திருந்தார்.
கடந்த மே 21-ஆம் தேதி நடந்த தாக்குதலில் 100 யெமன் ராணுவத்தினர் கொலைச் செய்யப்பட்டனர். 300 பேருக்கு காயம் ஏற்பட்டது. அந்த தாக்குதலில் பொறுப்பை அல்காயிதா ஏற்றுக்கொண்டதாக கூறப்பட்டது. ஜூன் 23-ஆம் தேதி தெற்கு யெமன் மற்றும் வடக்கு யெமனில் அல்காயிதாவின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளை யெமன் ராணுவம் கைப்பற்றியது.
கடந்த மாதம் தெற்கு யெமனில் அல்காயிதா நடத்தியதாக கூறப்படும் தாக்குதலில் ராணுவ தளபதி ஜெனரல் ஸலீம் அலி கொல்லப்பட்டார். கண்ணிவெடித் தாக்குதலிலும் ஏராளமான ராணுவத்தினர் கொலைச் செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக