திங்கள், மார்ச் 31, 2014

எகிப்து பாராளுமன்றத்துக்கு மே 26, 27-ல் பொதுத் தேர்தல்

எகிப்து அதிபர் முஹம்மது மோர்சியை எதிர்த்து மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் விளைவாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராணுவத்தால் அவர் பதவியிறக்கம் செய்யப்பட்டார்.

கீழக்கரை முஹம்மது சதக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் 26வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

பயனாளிகளுக்கு தாமதமின்றி முதியோர் ஓய்வூதியம்: எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

முதியோர், ஆதரவற்றோர், விதவைகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் கடந்த 6 மாதங்களாக வழங்கப்படவில்லை. ஓய்வூதியத் தொகையினை தாமதமின்றி வழங்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. தொழிற்சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இலங்கை மாகாணத் தேர்தல்:ராஜபட்ச கட்சி வெற்றி

இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு மாகாண கவுன்சில் தேர்தல்களில் ஆளும் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தமிழ் கணினி பயன்பாடு

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சார்பில் கணினி தொழில்நுட்பத்தை தமிழில் பயன்படுத்தும் வகையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை டி20 போட்டி: ஆஸ்திரேலிய அணி ஹாட்ரிக் தோல்வி

உலகக் கோப்பை டி20 போட்டியில் இரண்டாவது சுற்று  போட்டியில் இந்தியா மற்றும்  ஆஸ்திரேலிய அணிகள் மோதின.

ஞாயிறு, மார்ச் 30, 2014

வழக்கறிஞர் மஹ்மூத் ப்ராச்சாவுக்கு மிரட்டல்: பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மஹ்மூத் ப்ராச்சாவை மிரட்டி பணியவைக்க நடக்கும் முயற்சிகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

சதானந்தகவுடா மீது கிரிமினல் வழக்கு தொடருவேன் : சித்தராமையா பரபரப்பு பேட்டி

சதானந்தகவுடா மீது கிரிமினல் வழக்கு தொடருவேன் என்று முதல்–மந்திரி சித்தராமையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான்

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானும் வங்காளதேசமும் மோதிக்கொண்டன. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

மோடிக்கு எதிராக தமிழகம் முழுவதும் பிரசாரம்: கொளத்தூர் மணி ஆவேசம்

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலை கழக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சி தலைவர் கொளத்தூர் மணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பா.ஜ.க. பெரும் தொழில் நிறுவனங்களின் பின்புலத்தோடு மக்களவைத் தேர்தலில் களமிறங்கியுள்ளன. வளர்ச்சி என்ற பொய் பிரச்சாரத்தோடு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றத் துடிக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை திராவிடர் விடுதலைக்கழகம் முறியடிக்கும்.
இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, மனித நேய மக்கள் கட்சி,(எஸ்.டி.பி.ஐ) இந்திய சமூக ஜனநாயக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் போன்ற அரசியல் கட்சிகளுக்கு மக்களவை தேர்தலில் ஆதரவு தெரிவித்து களப்பணியாற்ற உள்ளோம்.

தர்மபுரி தொகுதியில் போட்டியிடும், அன்புமணி ராமதாசுக்கு தர்மபுரி மக்கள் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டவேண்டும். நரேந்திரமோடிக்கு எதிராக தமிழகம் முழுவதும் மேற்கொள்ளவும், துண்டுபிரசுரங்கள் விநியோகம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.

1989–-ல் நிறைவேற்றப்பட்ட தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் விடுபட்டிருந்த, சில கூறுகளை உள்ளடக்கிய ஒருபுதிய சட்டத்தை அவசர பிரகடனத்தின் வழியாக அமுலாக்கம் செய்துள்ள மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன், பொருளாளர் ரெத்தினசாமி, நாகை மாவட்டச் செயலாளர் மகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் அனைத்து மாவட்டச்செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளருக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் மேற்வது என்பன உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு

தொடர்ந்து நான்காவது வாரமாக அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

எஸ்.டி.பி.ஐ வடசென்னை வேட்பாளர் நிஜாம் முஹைதீன் வேட்புமனு தாக்கல்!

பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின் முதல் நாளான நேற்று (29/03/2014) எஸ்.டி.பி.ஐ கட்சியின் வடசென்னை வேட்பாளர் நிஜாம் முகைதீன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனுவை வாபஸ் பெறமாட்டேன்: ஜஸ்வந்த் சிங்!

"பார்மர் தொகுதியில் இருந்து வேட்பு மனுவைத் திரும்பப் பெறப்போவதில்லை'' என்று பாஜக அதிருப்தி தலைவர் ஜஸ்வந்த் சிங் திட்டவட்டமாகக் கூறினார்.

பா.ஜ.கவில் இணைந்த ஒரே நாளில் சபீர் அலி நீக்கம்!

பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர் சபீர் அலி எம்.பி., பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை புகழ்ந்த இவர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

மோடி, எடியூரப்பா, அத்வானி பா.ஜ.கவில் இருக்கலாம், நான் இருக்கக் கூடாதா?-பிரமோத் முத்தலிக் ஆவேசம்!

தீவிரவாத இந்துத்துவா அமைப்பான ஸ்ரீராம சேனாவின் தலைவர் பிரமோத் முத்தலிக், அண்மையில் பா.ஜ.கவில் இணைந்த ஐந்தே மணிநேரத்தில் நீக்கப்பட்டார். இதுக்குறித்து தி இந்து பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பது:
குஜராத்தில் ஆயிரக்கணக்கான மக்களை கொன்றதாக நரேந்திரமோடி மீது வழக்கு இருக்கிறது. பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக எடியூரப்பா மீது வழக்கு இருக்கிறது. பாபர் மஸ்ஜிதை இடித்ததாக அத்வானி மீது கூட வழக்கு இருக்கிறது. அவர்கள் எல்லாம் பா.ஜ.கவில் இருக்கலாம் நான் இருக்கக் கூடாதா? இவ்வாறு ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆந்திராவில் பா.ஜனதா–தெலுங்குதேசம் கூட்டணி முறிந்தது

பாராளுமன்ற தேர்தல் அறிவித்த உடனேயே ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைக்க பா.ஜனதா முடிவு செய்தது. இதையடுத்து பா.ஜனதா மாநில விவகார பொறுப்பாளர் பிரகாஷ் ஐவதேகர் ஆந்திரா வந்து தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு முதல் கட்ட பேச்சு வார்த்தை தொடங்கியது. ஆனால் பா.ஜனதாவுக்கு குறைவான தொகுதிகளே ஒதுக்க தெலுங்கு தேசம் முடிவு செய்தது. இதை பா.ஜனதா ஏற்கவில்லை. இதனால் முதல் கட்ட பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் ஏற்படாமல் பிரகாஷ் ஐவதேகர் டெல்லி சென்றார்.கடந்த 3 நாட்களுக்கு முன்பு பிரகாஷ் ஜவதேகர் மீண்டும் ஆந்திரா வந்தார். தெலுங்கு தேசம் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் இதில் எந்த உடன்பாடும் ஏற்பட வில்லை.

நேற்று இரவு வரை பேச்சு வார்த்தை நடந்தும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியுடன் பா.ஜனதா உறவு முறிந்தது. அங்கு தனித்து போட்டியிட பா.ஜனதா முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக தெலுங்கானா பகுதி பா.ஜனதா தலைவர் கிஷண் ரெட்டி கூறியதாவது:–
தெலுங்கு தேசம் கட்சியுடன் பா.ஜனதா கூட்டணி அமையவில்லை. அவர்கள் தொகுதி ஒதுக்குவது மலைக்கும் மடுவுக்கும் போன்ற வித்தியாசம் உள்ளது. தெலுங்கானா பகுதியில் பா.ஜனதா 119 சட்டசபை தொகுதியில் 17 பாராளுமன்ற தொகுதியிலும் பா.ஜனதா தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. நாளை உகாதியன்று முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளோம்.
தெலுங்கு தேசம் கட்சியால் ஆந்திராவில் எங்களுக்கு எந்த பலனும் இல்லை. தனித்து நின்றால் தெலுங்கு தேசம் கட்சி போணியாகாது.
இவ்வாறு அவர் கூறினார்.
சீமாந்திரா பகுதி பா.ஜனதா தலைவர் அரிபாபு கூறுகையில், ‘‘சீமாந்திரா பகுதியில் பா.ஜனதா 25 பாராளும்னற தொகுதியிலும், 175 சட்டமன்ற தொகுதியிலும் தனித்து போட்டியிடும் என்றார்.

ஆந்திராவில் இன்று உள்ளாட்சி தேர்தல்: விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

ஆந்திராவில் இன்று உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வமாக வந்து ஓட்டு போட்டனர்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள 10 மாநகராட்சிகள், 145 நகராட்சிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இன்று ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது.

தெலுங்கானா பகுதியில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ் கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது. சீமாந்திரா பகுதியில் ஓய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கும், தெலுங்கு தேசம் கட்சிக்கும் போட்டி ஏற்பட்டுள்ளது. விரைவில் சட்டசபைக்கும் பாராளுமன்றத்துக்கும் தேர்தல் வர இருப்பதால் அதற்கான ஒரு முன்னோட்டமாக இந்த உள்ளாட்சி தேர்தல் கருதப்படுகிறது. இதனால் பொது மக்கள் மிக ஆர்வமாக வந்து ஓட்டு போட்டனர்.

இன்று மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இதில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பதட்டமான தொகுதிகளில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 101 பேர் முன் எச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

அசாமில் தேர்தல் பிரசாரம் சமூகத்தை பிளவுபடுத்துவதாக பா.ஜனதா மீது பிரதமர் குற்றச்சாட்டு

அசாமில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், பா.ஜனதா கட்சி சமூகத்தை பிளவுபடுத்துவதாக குற்றஞ்சாட்டினார்.
10 ஆண்டுகளில் வளர்ச்சி
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் நேற்று அசாம் மாநிலம் திப்ருகர் மற்றும் ஜோர்காட் தொகுதிகளின் எல்லைப்பகுதியான கும்தாய் என்ற இடத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது:-
நாட்டின் சுகாதாரம், விவசாயம், கல்வி உள்ளிட்ட துறைகளில் கடந்த 10 ஆண்டுகளில் அபரிவிதமான வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட மற்றும் வறுமையில் வாடுகிற மக்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டதுடன், நலிவுற்ற மக்களின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் எந்த 10 ஆண்டுகளிலும் இல்லாத வளர்ச்சியை, கடந்த 10 ஆண்டுகளில் நாடு எட்டியுள்ளது.
ஊழல் ஒழிப்பு
ஊழலை ஒழிப்பதற்கு நாங்கள் எடுத்த நடவடிக்கைகளைப்போல வேறு யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஊழலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவர் என நாங்கள் உறுதியளித்துள்ளோம். மேலும் ஊழலுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டுவரவும் நாங்கள் முயற்சி மேற்கொண்டோம். ஆனால் பா.ஜனதா எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை.
அவர்களுக்கு (பா.ஜனதா) எந்தவித கொள்கையோ, நோக்கமோ இல்லை. ஒரே ஒரு நபரை மட்டுமே மையமாகக்கொண்டு அவர்களின் மொத்த கவனமும் உள்ளது. சமூகத்தை பிளவுபடுத்தும் அந்த கட்சியால் எப்படி சிறப்பான அரசை அமைக்க முடியும்? எனவே காங்கிரஸ் கட்சியை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க முடியும் ஷேவாக் நம்பிக்கை

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:–
எனது கடந்த சீசன் சிறப்பாக அமையவில்லை. நான் போதிய ரன்கள் எடுக்கவில்லை. ஆனால் அடுத்த மாதம் (ஏப்ரல்) தொடங்கும் 7–வது ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த முறை புதிய அணியில் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) புதிய வீரர்களுடன் இணைகிறேன். புதிய அணி என் மீது வைத்து இருக்கும் நம்பிக்கையை நிறைவேற்ற முடியும் என்று நம்புகிறேன்.
இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை என்னால் சொல்ல முடியாது. ரன் குவிப்பதே எனது பணியாகும். அணியில் நான் இடம்பெறுவேனா? இல்லையா? என்பதை தேர்வாளர்கள் தான் முடிவு செய்ய முடியும். இந்த ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக விளையாடினால் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்கலாம். எனது ஆட்டத்தை பொறுத்தே இது அமையும்.
இவ்வாறு அவர் கூறினார். ஷேவாக் கடைசியாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

கடலில் மிதந்த பொருட்கள் மாயமான விமானத்தின் உடைந்த பாகங்கள் இல்லை

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை. 

 இந்த நிலையில் இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதி மாற்றபட்டு உள்ளது. தற்போது 1100 கீமீட்டர் வடக்கில் தேடும் பணி தொடங்கி உள்ளது இங்கு நம்பகமான புதிய ஆதாரங்கள் கிடைத்து உள்ளது. புதிய தேடும் பகுதி 319000 சதூர கிலோமீட்டர் ஆகும் இது பெர்த்தின் மேற்கே 1850 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. 8 விமானங்கள் 6 கப்பல்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளன.

ஆஸ்திரேலிய பிரதம மந்திரி டோனி அபோட் கூறும் போது பெர்த்தில் உள்ள கடற்படை கப்பலில் கறுப்பு பெட்டி மீட்பு கருவிகள் தயார் நிலையில் உள்ளது.தேவை என்றால் அது தேடப்படும் பகுதிக்கு எடுத்து செல்லப்படும்.நாங்கள் இந்த வேலைக்கான கால அளவை நிர்ணயிப்பது மிகவும் கடினம் எனறு கூறினார். இதனிடையே, கடலில் நீலம் மற்றும் பழுப்பு நிறம் உள்ளிட்ட பல நிறங்களில் சில பொருட்கள் மிதந்ததாகவும் அது மாயமான மலேசிய விமானத்தின் நிறங்களை போன்ற தோற்றத்தில் உள்ளது. எனவே, அவை மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. 

 இந்த நிலையில், விமானத்தின் பாகங்கள் மிதந்ததாக என்று கூறப்பட்ட குறிப்பிட்ட கடல் பகுதிக்கு சென்றிருந்த சீன மற்றும் ஆஸ்திரேலியக் கப்பல்கள் முதல் தடவையாக தற்போது பல பொருட்களை நீரில் இருந்து எடுத்துள்ளன. சீனக் கப்பல்கள் வலையைப் பயன்படுத்தி பொருட்களை தண்ணீரில் இருந்து எடுப்பதை தொலைக்காட்சிப் படங்கள் காட்டியுள்ளன.

ஆனால் அவையெல்லாம் விமானத்திலிருந்து வந்திருக்கக்கூடிய பொருட்கள் அல்ல என்று தெளிவாகத் தெரிகிறது. கண்டெடுக்கப்பட்ட பொருளில் எதுவுமே காணாமல்போன MH370 விமானத்துடன் தொடர்புடையது என்று இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.

இங்கிலாந்து குட்டி இளவரசனின் புகைப்படம் வெளியானது

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்–டயானா தம்பதியின் மூத்த மகன் இளவரசர் வில்லியம். இவரது மனைவி இளவரசி கேத் மிடில்டனுக்கு கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
 அந்த குழந்தைக்கு இளவரசர் ஜார்ஜ் என்று பெயரிடப்பட்டப்பட்டது. குழந்தை பிறந்த பிறகு  பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்பதை கேத் மிடில்டன் தவிர்த்து வந்தார். இதனால், தங்கள் நாட்டின் குட்டி இளவரசனான ஜார்ஜின் முகத்தை காண மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்நிலையில், இளவரசர் வில்லியம் - கேத் மிடில்டன் தம்பதியருடன் 8 மாத குழந்தையாக இருக்கும் ஜார்ஜ் இடம்பெற்றுள்ள புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

சனி, மார்ச் 29, 2014

வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் : திமுக புகார்

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுகவினர் மீதும், அதிமுக வேட்பாளர் அன்வர் ராஜா மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமாரிடம் திமுக புகார் மனு அளித்துள்ளது. திமுக தலைமைக்கழக வழக்கறிஞர் பரந்தாமன், நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமாரிடம் புகார் மனு தந்தார்.

 அதில், கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி, அறந்தாங்கி தாலுகாவில் மூக்குடி, நரிக்குறவர் காலனி பகுதிகளில் வாக்காளர்களுக்கு அதிமுக நிர்வாகிகள் பணம் தந்த காட்சி ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்த வீடியோ காட்சி அடங்கிய சிடி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. 


‘இனம்' திரைப்படத்தை கண்டித்து புதுச்சேரி தியேட்டரில் தமிழ் அமைப்பினர் போராட்டம்

புதுச்சேரியில் உள்ள தியேட்டரில் ‘இனம்‘ என்ற தமிழ் திரைப்படம் நேற்று வெளியானது. அந்த படத்தில் தமிழர்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி இருப்பதாக கூறி திரைப்படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து தியேட்டர் உரிமையாளர்களுக்கு சில தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் மனு அளித்தனர்.

 இந்த நிலையில், நேற்று காலை காமராஜர் சாலையில் உள்ள ஒரு தியேட்டரில் பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, தமிழ் அமைப்புகளை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு வந்து போஸ்டரை கருப்பு மையை ஊற்றி அழித்தனர். தகவலறிந்து கோரிமேடு போலீசார் வந்து அவர்களை தடுத்தனர். 

அப்போது, தமிழ் அமைப்பினர் பெட்ரோலை ஊற்றி போஸ்டர் மற்றும் தியேட்டரில் இருந்த திரைப்பட பேனர்களை தீ வைத்து எரித்தனர். உடனே, போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இதற்கிடையே தடியடியை கண்டித்து தியேட்டர் கண்ணாடி மீது சிலர் கல் வீசி தாக்கினர்.தடியடியில் 3 பேர் காயம் அடைந்தனர். 

உலக கோப்பை டி20 : அரை இறுதியில் கம்பீரமாக முன்னேறியது இந்தியா

உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் 10 சுற்று 2வது பிரிவு லீக் ஆட்டத்தில், வங்கதேச அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறியது. 

மிர்பூர், தேசிய ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. வங்கதேசம் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்தது. அனாமுல் ஹக் அதிகபட்சமாக 44 ரன் எடுத்தார். முஷ்பிகுர் 24, நசீர் உசேன் 16, மகமதுல்லா 33*, மோர்டசா 6* ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் மிஷ்ரா 3, அஷ்வின் 2, புவனேஷ்வர், ஷமி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

அடுத்து களமிறங்கிய இந்தியா 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்து வென்றது. தவான் 1, ரோகித் 56 ரன் (44 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தனர். கோஹ்லி 57* ரன் (50 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), டோனி 22* ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தினர். ஹாட்ரிக் வெற்றியுடன் (6 புள்ளி) 2வது பிரிவில் முதலிடம் வகிக்கும் இந்தியா அரை இறுதிக்கு கம்பீரமாக முன்னேறியது.

பிரசாரத்தின் போது சில்மிஷம் செய்ததால்:தொண்டரின் கன்னத்தில் ‘பளார்’ அறை விட்ட நடிகை நக்மா

பிரசாரத்தின் போது சில்மிஷம் செய்த தொண்டரின் கன்னத்தில், நடிகை நக்மா ‘பளார்’ என்று அறைந்தார்.
நக்மா பிரசாரம்
நடிகை நக்மா உத்தரபிரதேச மாநிலம் மீரட் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து அவர் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவருடன் ஏராளமான தொண்டர்கள் செல்கிறார்கள். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் கூட்டம் கூடுகிறது.
சில நாட்களுக்கு முன் பிரசாரத்தின் போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் நக்மாவின் கன்னத்தில் முத்தமிட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், நக்மா அதை பெரிதுபடுத்தவில்லை.
சில்மிஷம்
இந்த நிலையில், அதேபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. மீரட் நகரில் நடிகை நக்மா வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அவருடன் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும் சென்றனர். நக்மாவை அருகில் சென்று பார்ப்பதற்காக பல இடங்களில் கூட்டத்தினர் முண்டியடித்தனர். அப்போது கூட்டத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தொண்டர் ஒருவர் நக்மாவிடம் சில்மிஷம் செய்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நக்மா, தொண்டரின் கன்னத்தில் பளார் என்று ஓங்கி அறைவிட்டார். இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால், பிரசாரத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு நக்மா அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார்.
அதிர்ச்சி
இந்த சம்பவத் தினால் நக்மா அதிர்ச்சியுடன் காணப்பட்டார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடந்தால் நான் மீரட் பக்கமே வரமாட்டேன்’’ என்றார்.
இந்த சம்பவம் பற்றி மீரட் காங்கிரஸ் தலைவர் சலிம் பாரதி கூறுகையில், மீரட்டில் நக்மா போட்டியிடுவதால் தொண்டர்களிடையே எழுச்சி ஏற்பட்டு இருப்பதாகவும், அதிக அளவில் கூட்டம் கூடுவதால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது சகஜம்தான் என்றும் தெரிவித்தார்.

வெள்ளி, மார்ச் 28, 2014

எஸ்.டி.பி.ஐ கட்சி போட்டியிடாத 37 தொகுதிகளில் தி.மு.க.கூட்டணிக்கு ஆதரவு!

எஸ்.டி.பி.ஐ  கட்சி போட்டியிடாத 37 தொகுதிகளில் தி.மு.க.கூட்டணிக்கு ஆதரவு தருவது என கட்சியின் நிர்வாகக்குழுவில் முடிவு.

இதுகுறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது :
எஸ்.டி.பி.ஐ  கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம் 26.03.2014  அன்று மாநில தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தலைமையில் நடைபெற்றது.  அதில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் 40 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ கட்சி போட்டியிடுகிறது.

கட்சியின்  மாநில பொதுக்குழு முடிவின்படி தமிழகத்தில் வட சென்னை, திருநெல்வேலி, இராமநாதபுரம் ஆகியதொகுதிகளில்  எஸ்.டி.பி.ஐ கட்சி தனித்து போட்டியிடுகிறது. நாட்டில் நிலவும் மதவாதம், ஊழல், மோசமானஅரசியல் கலாச்சாரம்,  ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தொடர்ந்து  புறக்கணிக்கப்படும் நிலை, தவறான பொருளாதாரகொள்கை போன்றவற்றிற்கெதிராக போராட்ட அரசியல் இயக்கமாக  எஸ்.டி.பி.ஐ கட்சி  தொடர்ந்து போராடிவருகிறது. வளர்ச்சியும் பெற்று வருகிறது.

மாற்று அரசியல் சக்தியாக வளர்ந்து வரும் எஸ்.டி.பி.ஐ வளர்ச்சி பெறுவதும், வெற்றி பெறுவதும் காலத்தின் தேவையாகும். எனவே  எஸ்.டி.பி.ஐ கட்சி போட்டியிடும் மூன்று தொகுதிகளிலும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வேட்ப்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு தமிழக வாக்காளர்களை கட்சியின் நிர்வாக குழு கேட்டுக்கொள்கிறது.

எஸ்.டி.பி.ஐ கட்சி போட்டியிடாத தமிழகம் மற்றும் புதுவையில்  37 தொகுதிகளிலும் மதவாத பா.ஜ.க கூட்டணிக்குஎதிராக மதசார்ப்பற்ற வாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையில் தி.மு.க கூட்டணியை ஆதரிப்பது என்று நிர்வாககுழு முடிவு செய்கிறது.

மதவாதம் இன்று நாடு சந்திக்கும் பேரபாயம் ஆகும். மதவாதத்தின் அடையாளமாக திகழும் நரேந்திரமோடி தலைமையிலான மதவாத கூட்டணி படுதோல்வியடைய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். எனவே மதவாதத்திற்கு  எதிராக  வலுவான அணியாக களம் காணும் தி.மு.க கூட்டணிக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி தான் போட்டியிடாத தொகுதிகளில் ஆதரவளிக்கிறது. இந்நாட்டின் மதசார்பின்மையின் மீது நம்பிக்கையுள்ள அனைவரும் எஸ்.டி.பி.ஐ  போட்டியிடும் தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கும், இதர  37 தொகுதிகளில் தி.மு.க கூட்டணிக்கும் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுமென எஸ்.டி.பி.ஐ கட்சி வேண்டி கேட்டுக்கொள்கிறது.

20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட்; இந்தியா அணி பந்து வீச்சு


20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில்  நடக்கிறது. இன்று நடக்கும் சூப்பர் 10 லீக் போட்டி ஒன்றில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. 

முதலில் டாஸ் வென்ற இந்திய அணி அதன் கேப்டன் தோனி முதலீல் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளார்.கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி நிச்சயம் வெற்றி பெறும்  என்று எதிர்பார்க்கபடுகிறது.

மலேசிய விமானம் விரைவில் மீடக்ப்படும்:தேடும் பகுதியில் ஒரு பொருள் காணப்படுவதாக தகவல்

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது.  அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.
இந்த நிலையில் இந்திய பெருங்கடலில்  விமானத்தை தேடும் பகுதி மாற்றபட்டு உள்ளது. தற்போது  1100 கீமீட்டர் வடக்கில் தேடும் பணி தொடங்கி உள்ளது இங்கு நம்பகமான புதிய ஆதாரங்கள் கிடைத்து உள்ளது.
புதிய தேடும் பகுதி 319000 சதூர கிலோமீட்டர் ஆகும்  இது பெர்த்தின் மேற்கே 1850 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.மாயாமான மலேசிய விமானம் எம்.எச் 370 முன்பு கருதப்பட்டதை விட வேகமாக பயணம் செய்து இருக்கலாம் என இப்போது கருதப்படுகிறது.
நியூசிலாந்தின் ஆர்யான் விமானம் ஒன்று கடலில் பொருட்கள் கிடப்பதை பார்த்துள்ளதாகவும், இருந்த போதிலும் இந்த பொருட்கள் விமானத்தின் உடையது தான் என்பதை கப்பல்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த உறுதிப்படுத்தும் தகவல் கிஅட்டவில்லை எனவும் அமசா கூறி உள்ளதுஇந்த மாற்றம் புதிதாகக் கிடைத்துள்ள நம்பகமான துப்புக்களின் அடிப்படையில் ஏற்படுத்தப்படுகிறது என்று ஆஸ்திரேலியா கூறுகிறது.
ராடார் தகவல்கள் அந்த விமானம், மேலும் மிக விரைவாக பறந்து கொண்டிருந்தது, எரிபொருளை அதிகமாக செலவழித்தது, என்று காட்டுவதை அடுத்து இந்த தேடல் வேட்டையில் மாற்றம் வருகிறது.

காமராஜர் படிக்கச் சொன்னார், ஜெயலலிதா குடிக்கச் சொல்கிறார் - ராமசுப்பு

அப்போதைய முதல்வர் காமராஜர் படிக்கச் சொன்னார். இப்போதைய முதல்வர் குடிக்கச் சொல்கிறார் என்று காங்கிரஸ் கட்சியின் நெல்லை வேட்பாளர் ராமசுப்பு கூறியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பையில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் நெல்லை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பளார் ராமசுப்பு பேசியதாவது"
காங்கிரஸ் ஆட்சியில் தான் பஞ்சாலை மற்றும் பீடி தொழிலாளர்களுக்கு பென்ஷன் ரூ.1,000 வழங்கப்பட்டதுடன் அதற்காக ரூ.13 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு 100 நாள் வேலை திட்டத்தை உருவாக்கி 150 நாட்களாக அதிகரித்ததுடன்,, அதற்கான கூலியை ரூ.167 ஆக உயர்த்தியளித்தது.
விவசாயிகளுக்கு ரூ.75 ஆயிரம் கோடி கடனையும் எங்கள் அரசு தள்ளுபடி செய்தது. மதுவினால் ரூ.27ஆயிரம் கோடி அரசுக்கு வருமானம் என்று தமிழக முதல்வர் பெருமையுடன் கூறுகிறார். மதுவால் எத்தனை குடும்பங்களில் தாய்மார்கள் கண்ணீர்  வடிக்கிறார்கள் தெரியுமா.
அப்போதைய முதல்வர் காமராஜர் படிக்கச் சொன்னார். இப்போதைய முதல்வர் குடிக்கச் சொல்கிறார். இது சரியா? கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நான் வாக்கு கேட்கும் போது என்ன வாக்குறுதி கொடுத்தேனோ அதை நிறைவேற்றியுள்ளேன். இவ்வாறு ராமசுப்பு பேசினார்.

தமிழக மீனவர்களை விடுவிக்க ராஜபக்ஷ உத்தரவு

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன் பிடித்தமைக்காக கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு வெள்ளிக்கிழமை காலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பில் சென்ற முறை இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்த இந்தியா இம்முறை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் விலகியிருந்தது தனக்கு மகிழ்ச்சியைத் தருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் வெளி தலையீடு நிகழும்போது, அது உள்ளக நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகளை பாதிப்பதாக அமையும் என்று இந்தியா தெரிவித்திருந்தது.
ஐ.நா.பிரேரணைக்கு ஆதரவளிக்காமல் அதற்கான வாக்கெடுப்பின் மீது ஒதுங்கியிருந்த இந்தியா மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.இலங்கை இந்திய மீனவர் பிரச்சினையில் தீர்வு காண்பதற்காக இரு நாட்டின் மீனவ பிரதிநிதிகளுக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டைகளை சந்தித்துள்ளன.
இந்நிலையில் எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை மீன்பிடி துறை அமைச்சர் கண்டிப்பாக அறிவித்திருந்த நிலையில், கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தடுத்தவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம், மன்னார் சிறைச்சாலைகளில் 98 இந்திய மீனவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாயத்து உத்தரவின் பேரில் பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண்ணுக்கு நஷ்டஈடு

பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க மேற்கு வங்க மாநில அரசாங்கம் தவறிவிட்டது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.தான் பிறந்த பழங்குடி சமூகம் சாராத ஆணை காதலித்த காரணத்தினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட அந்த 20 வயது பெண் தெரிவித்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் அந்த கிராமத்தின் தலைவர் உட்பட 13 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.சந்தல் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இந்த பெண், அருகில் இருந்த பிர்பம் மாவட்டதை பழங்குடி சமூகம் சாராத ஆணொருவரைக் காதலித்ததற்காக அவர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டார் என மேற்கு வங்க மாநில காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
ஐந்து ஆண்டுகளாக அந்த பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையில் இந்தக் காதல் உறவு இருந்து வந்தது.காதல் புரிந்த குற்றத்திற்காக அவர்களுக்கு கிராமத்தின் தலைவரால் தலா 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.அந்த ஆண் அபராதப் பணத்தை கட்டிவிட்டதாவும், ஆனால் பெண்ணின் குடும்பத்தால் அந்த அபராதத் தொகையை கட்ட முடியவில்லை என்றும் கூறப்படுகின்றது.பெண் குடும்பத்தால் தொகையை கட்ட முடியாத காரணத்தினால் அந்த பெண்ணின் தூரத்து உறவினரான கிராமத்தின் தலைவர் அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

கிராம பஞ்சாயத்து தீர்ப்புகள்

உள்ளூர் பெரியவர்களால் அமைக்கப்படும் சமூகம் சார்ந்த கிராம பஞ்சாயத்துகள் கிராமப்புற இந்தியாவில் வாழும் மக்களின் வாழ்க்கையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக உள்ளூர் மரபுகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.
இந்த சம்பவம் இந்தியாவில் பல தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பையும் சீற்றத்தையும் எழுப்பியது.இது ‘மனிதாபிமானமற்ற செயல்’ என்று பல சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
2012 ஆம் ஆண்டில், டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான மாணவி பலியான சம்பவம், இந்தியாவில் தொடரும் பாலியல் வன்முறைகள் தொடர்பில் பெரும் எதிர்ப்பலைகளை உருவாக்கியமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டங்களை அரசாங்கம் கடுமையாக்கினாலும், சமூகம் இந்த சம்பவங்கள் குறித்து தற்போது வெளிப்படையாக விவாதித்தாலும், இந்தியாவில் பல பெண்கள் பாலியல் தொந்தரவிற்கு பயந்து வாழ்கின்றனர் என்பதே யதார்த்தம்.

தேர்தல் அதிகாரி புகாரை வாங்க மறுத்த போலீசார்:அதிமுகவினருக்கு சாதகமாக செயல்படுபடுவதாக குற்றச்சாட்டு

கூம்பு வடிவ குழாய் மூலம் அதிமுகவினர் பிரசாரம் செய்வதாக, தேர்தல் அலுவலர் கொடுத்த புகாரை உள்ளூர் போலீசார் வாங்க மறுத்துவிட்டனர். இது குறித்து அவர் தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் அனுப்பி உள்ளார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து, சமக தலைவர் சரத்குமார், நேற்று முன்தினம் மாலை திருநீர்மலை அடுத்த லட்சுமிபுரத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அந்த இடத்தில், தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ள கூம்பு வடிவிலான குழாய்கள் மூலம் பாடல்களை ஒலிபரப்பினர்.


தகவலறிந்து நந்தனம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சிறப்பு தாசில்தாரும், தேர்தல் அலுவலருமான ஜெயக்குமார் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அதிமுகவினரை எச்சரித்ததுடன் கூம்பு வடிவிலான குழாயை அகற்றும்படி கூறினர். அதற்கு திருநீர்மலை பேரூர் அதிமுக செயலாளர் சுபாஷ், ‘‘குழாயை அப்புறப்படுத்த முடியாது, என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்’’ என ஒருமையில் பேசியதாக தெரிகிறது. இந்த சம்பவத்தை, தேர்தல் அதிகாரிகள் வீடியோ எடுத்தனர்.

கூம்பு வடிவ குழாயை அகற்றாததால் தகுந்த ஆதாரங்களுடன் குரோம்பேட்டை போலீசில் தேர்தல் அதிகாரி ஜெயகுமார் புகார் செய்தார். ஆனால், இன்ஸ்பெக்டர் வரட்டும்,  எஸ்ஐ வரட்டும்டும் என கூறி புகாரை போலீசார் வாங்க மறுத்தனர். அவர்கள் வந்த பிறகும் புகாரை வாங்கவில்லை. உதவி கமிஷனர் வரட்டும் என கூறினர். நீண்ட நேரத்துக்கு பிறகு உதவி கமிஷனர் வந்தார். இதையடுத்து, சுமார் 2 மணி நேரத்துக்கு பின் புகார் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தை தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் எந்த ஒரு புகாரை கொடுத்தாலும், 2 நாள் கழித்து தான் போலீசார் புகாரை விசாரிப்பார்கள். தேர்தல் நடைமுறைகள் அறிவிக்கப்பட்ட பிறகும் போலீசார் கட்சிக்காரர்களுக்கு சாதகமாக செயல்படுகிறார்கள். தேர்தல் அதிகாரியாக புகார் கொடுத்தவர், ஒரு மாஜிஸ்திரேட் பதவி உடையவர். அவரையே போலீசார் அலைக்கழிக்கும்போது எங்களை போன்ற பாமர மக்களுக்கு என்ன கதி என காவல்துறை உயர் அதிகாரிகள் சிந்திக்க வேண்டும். சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


ஹேல்ஸ் அதிரடியால் இங்கிலாந்து அணி இமாலய வெற்றி

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது.  இதனை தொடர்ந்து இலங்கை அணி பேட்டிங் செய்தது.  அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தில்சான் மற்றும் ஜே. பெரேரா ஆகியோர் களம் இறங்கினர்.  தில்சான் (55), பெரேரா (3) ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதன் பின்பு ஜெயவர்த்தனே அதிரடியாக ஆடி (89) ரன்கள் சேர்த்து ஆடடமிழந்தார்.  சங்கக்கரா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.  சி. பெரேரா (23) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.  அந்த அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது.  இங்கிலாந்து அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதனை அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணியின் வீரர்களான லம்ப் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.  அலி (0), மோர்கன் (57) மற்றும் பட்லர் (2) ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.  ஹேல்ஸ் (116) மற்றும் போபரா (2) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

மகன்களிடம் பொறுப்பை ஒப்படைத்தார் :சர்வதேச ஊடகத் துறையின் மன்னன் ரூபர்ட் முர்தோக்


சர்வதேச ஊடகத் துறையின் மன்னனாக திகழும் ரூபர்ட் முர்தோக் தனது நிறுவனத்தின் இணை தலைமைப் பொறுப்பை மகன்களிடம் ஒப்படைத்தார்.
இந்தியாவில் ஸ்டார் ஊடக குழுமம் உள்பட அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் உள்ளிட்ட நாடுகளில் ஏராளமான பத்திரிகைகள், தொலைக்காட்சி நிறுவனங்களை கொண்டுள்ள நியூஸ் கார்ப் மற்றும் டுவென்டி பர்ஸ்ட் செஞ்சுரி பாக்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் ரூபர்ட் முர்தோக்.

இவர் தனது ஊடக சாம்ராஜ்ஜியத்தில் மேற்கொண்டுள்ள அதிகார மாற்றம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நியூஸ் கார்ப் மற்றும் டுவென்டி பர்ஸ்ட் செஞ்சுரி பாக்ஸ் நிறுவனத்தின் இணை தலைவராக லாக்லன் செயல்படுவார். இளைய மகன் ஜேம்ஸ் முர்தோக், டுவென்டி பர்ஸ்ட் செஞ்சுரி பாக்ஸ் நிறுவனத்தின் இணை தலைமை செயல்அதிகாரியாக செயல்படு வார் என்று கூறியுள்ளார்.

தேர்தல் துறைக்கும், தமிழக அரசுக்கும் இடையே மீண்டும் ஒரு பிரச்சினை

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜான்தங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநந்திக்கரை பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டி ருந்தார்.

அப்போது அவரது ஆதரவாளர் வீட்டில் கறி விருந்து அளிக்கப்படுவதாக தேர்தல் துறையினருக்கு எதிர்க்கட்சியினர் தகவல் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த வீடியோ கண்காணிப்புப் படையினர், விருந்தை படம் பிடிக்கத் தொடங்கினர். அதிமுக தரப்பிலோ, அந்த ஊரில் ஹோட்டல் இல்லாததால், அங்கு சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்ததாக தெரிவித்துள்ளனர்.அப்போது அதிகாரிகளை வேட்பாளர் ஜான் தங்கம், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் தமிழ் மகன் உசேன் உள்ளிட்டவர்கள் மிரட்டியதாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக வேட்பாளர் ஜான் தங்கம், தமிழ் மகன் உசேன் உள்ளிட்டோர் மீது குலசேகரம் போலீஸில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆனால் அடுத்த நாளே அதிமுகவைச் சேர்ந்த மனோகரன் என்பவர், தனது வீட்டுக்குள் அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து மிரட்டியதாக போலீஸில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுளளது.இதனால் மற்ற அதிகாரிகள், தேர்தல் களத்தில் தீவிர பணியில் ஈடுபடத் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தினரின் கவனத்துக்கு வந்துள்ளது. ஆட்சியரிடம் அச்சம்பவம் பற்றி அறிக்கை கேட்கப்பட்டது. அவரும் அதனை அனுப்பி வைத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையத்திடம் இப்பிரச்சினையைக் கொண்டு செல்ல தேர்தல் துறையினர் முடிவெடுத்துள்ளனர்.

மாநகர சிறிய பஸ்களில் இலை படத்தை அகற்றும் விவகாரம் முடிந்துள்ள நிலையில், தற்போது தேர்தல் துறைக்கும், தமிழக அரசுக்கும் இடையே மீண்டும் ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது; இந்தியா புறக்கணித்தது

ஜெனிவாவில் நேற்று இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீது நடந்த வாக்குப் பதிவை இந்தியா உட்பட 12 நாடுகள் தவிர்த்தது. ஆனாலும் 23 நாடுகளின் ஆதரவுடன் இந்தத் தீர்மானம் நிறைவேறியது.

இலங்கைப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் மீது சர்வதேச விசாரணை நடத்தக் கோரும் இந்தத் தீர்மானத்திற்கு எதிராக 12 நாடுகள் வாக்களித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.முதல் முறை இத்தகைய தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் இந்தியா தவிர்த்துள்ளது. 2009, 2012 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில், இலங்கை போர் குற்றங்கள் குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மூன்றுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்து வாக்களித்திருந்தது.

 இந்த முறை தீர்மானத்தை தவிர்த்ததைக் குறித்து, ஐ.நாவுக்கான இந்தியப் பிரதிநிதி திலீப் சின்ஹா கூறியதாவது:
"இந்தத் தீர்மானம் ஒழுங்கற்று, நடைமுறையில் சாத்தியமில்லாமல் இருப்பதால் இந்தியா இதை தவிர்க்கிறது. ஐநா மனித உரிமைக் கவுன்சிலின் உயர் ஆணையர் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து தலையிட்டு, விசாரணை நடத்தி, கண்காணிக்க வேண்டும் என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த தீர்மானங்களைப் போல் இல்லாமல், இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் உள்ளது.

இறையாண்மையில் தலையிடும் விதமாக இருக்கும் அணுகுமுறை எதிர்வினையை அளிக்கும் என்பதை இந்தியா உறுதியாக நம்புகிறது. சர்வதேச நாடுகள் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மற்று ஒத்துழைப்பு என்கிற அடிப்படை கொள்கையிலிருந்து விலகுவது மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை மதித்து, பாதுகாக்க மனித உரிமைக் கவுன்சில் எடுத்து வரும் முயற்சிகளை குறைந்த்து மதிப்பிடுவதாகவே இருக்கும்" என்று அவர் கூறினார்.

வியாழன், மார்ச் 27, 2014

50 ஆண்டு சிறை வாசம்: ஜப்பானில் மரண தண்டனைக் கைதி விடுவிப்பு

அவரது வழக்கு மீது மறுவிசாரணை நடத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.தற்போது 78 வயதாகும் இவாவோ ஹக்காமாதா ஒரு குத்துச் சண்டை வீரர்.
மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்த நிலையில் உலகில் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்தவர் இவர் தான் என்று கருதப்படுகின்றது.
தனது எஜமானையும் அவரது மனைவியையும் அவர்களின் இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்தமை தொடர்பிலேயே அவர் ஆரம்பத்தில் குற்றவாளியாகக் காணப்பட்டார்.
ஆனால் ஷிசோகா நகர நீதிமன்றம் அவரது மரண தண்டனையை இடைநிறுத்தியுள்ளது.
கொலைச் சம்பவ இடத்திலிருந்து கிடைத்த ஆடைகளிலிருந்து கிடைத்த இரத்தத்தின் டிஎன்ஏ மரபணுத் தகவல்கள் ஹக்கமாதாவினது அல்லவென்று அவரது வழக்குரைஞர்கள் நீதிமன்றத்துக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.
விசாரணையாளர்கள் சாட்சி ஆதாரங்களை போலியாக சோடித்திருக்கலாம் என்று நீதிபதி கூறுகிறார்.