உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் 10 சுற்று 2வது பிரிவு லீக் ஆட்டத்தில், வங்கதேச அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறியது.
மிர்பூர், தேசிய ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. வங்கதேசம் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்தது. அனாமுல் ஹக் அதிகபட்சமாக 44 ரன் எடுத்தார். முஷ்பிகுர் 24, நசீர் உசேன் 16, மகமதுல்லா 33*, மோர்டசா 6* ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் மிஷ்ரா 3, அஷ்வின் 2, புவனேஷ்வர், ஷமி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய இந்தியா 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்து வென்றது. தவான் 1, ரோகித் 56 ரன் (44 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தனர். கோஹ்லி 57* ரன் (50 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), டோனி 22* ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தினர். ஹாட்ரிக் வெற்றியுடன் (6 புள்ளி) 2வது பிரிவில் முதலிடம் வகிக்கும் இந்தியா அரை இறுதிக்கு கம்பீரமாக முன்னேறியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக