உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானும் வங்காளதேசமும் மோதிக்கொண்டன. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. துவக்க ஆட்டக்காரர்களாக அகமது ஷெஷாத், கம்ரான் அக்மல் ஆகியோர் களமிறங்கிறனார்கள். தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆடினார் ஷெஷாத். ஆட்டத்தின் 5வது ஓவரில் அக்மல் 9 ரன்னில் அவுட்டனார். பின்னர் வந்த ஹபீஸ், உமர் அக்மல் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டானபோதும் ஷெஷாத் வங்கதேச பந்துவீச்சை அடித்து நொறுக்கிக்கொண்டே இருந்தார். இவருடன் 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சோயப் மாலிக் 26 ரன்களும், 6வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அப்ரிடி 22 ரன்களும் எடுத்து அவுட்டானார்கள். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை எடுத்தது.
அடுத்து தனது ஆட்டத்தை தொடங்கிய வங்கதேச அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்த வண்ணம் இருந்தன. எனினும் அந்த அணியின் ஷகிப் அல் ஹசன் அதிரடியாக ஆடி 38 ரன்கள் சேர்த்தார். அந்த அணியின் பின்வரிசை ஆட்டக்காரர்களான நசீர் ஹுசைன் 23 ரன்களும், மகமதுல்லா, மொர்டாசா ஆகியோர் தலா 17 ரன்களும் எடுத்தனர். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் வங்கதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் மட்டுமே எடுத்ததால் பாகிஸ்தான் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆட்டநாயகனாக பாகிஸ்தானின் அகமது ஷெஷாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக