வெள்ளி, மார்ச் 21, 2014

மியாமி டென்னிஸ்: 28 நிமிடத்தில் வென்று பின்லாந்து வீரர் சாதனை


மியாமியில் நடந்து வரும் சோனி ஏடிபி டென்னிஸ் போட்டி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் பின்லாந்து வீரர் ஜர்கோ நிமைன்– ஆஸ்திரேலியா வீரர் பெர்னர்ட் டாமிக் மோதினர்.

இதில் ஜர்கோ நிமைன் 28 நிமிடத்தில் வெற்றி பெற்றார். 6–0, 6–1 என்ற நேர்செட் கணக்கில் டாமிக்கை வீழ்த்தினார். ஏடிபி டென்னிஸ் இந்த ஆட்டம் தான் குறைந்த நேரத்தில் முடிந்த ஆட்டம் ஆகும். குறைந்த நேரத்தில் வெற்றி பெற்ற வீரர் என்ற பெருமையை ஜர்கோ நிமைன் பெற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக