இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்–டயானா தம்பதியின் மூத்த மகன் இளவரசர் வில்லியம். இவரது மனைவி இளவரசி கேத் மிடில்டனுக்கு கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தைக்கு இளவரசர் ஜார்ஜ் என்று பெயரிடப்பட்டப்பட்டது. குழந்தை பிறந்த பிறகு பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்பதை கேத் மிடில்டன் தவிர்த்து வந்தார். இதனால், தங்கள் நாட்டின் குட்டி இளவரசனான ஜார்ஜின் முகத்தை காண மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்நிலையில், இளவரசர் வில்லியம் - கேத் மிடில்டன் தம்பதியருடன் 8 மாத குழந்தையாக இருக்கும் ஜார்ஜ் இடம்பெற்றுள்ள புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக