புதன், மார்ச் 26, 2014

கலவர குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்: ஐக்கிய ஜனதா தளம்




முசாபர்நகர் கலவர குற்றவாளிகளான பா.ஜ.க. மற்றும் பகுஜன் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்கள் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என ஐக்கிய ஜனதா தள கட்சி தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து ஐக்கிய ஜனதா தள கட்சியின் செய்தித் தொடர்பாளர் கே.சி. தியாகி கூறுகையில், “முசாபர்நகர் கலவரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும். கலவர குற்றவாளிகளான கதிர் ராணா (பகுஜன் சமாஜ்) முசாபர்நகர் தொகுதியிலும், ஹூக்கும் சிங் (பா.ஜ.க) கைராணா தொகுதியிலும், பார்டெண்டு சிங் (பா.ஜ.க) பிஜ்நாவுர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். 

அவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதித்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அமைதி கெடுக்கப்படும். அவர்களுடைய தலைவர்களின் விரும்பத்தகாத பேச்சுக்கள் உத்தர பிரதேசத்தில் மீண்டும் வன்முறைக்கு வழிவகுக்கும். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் செயலாகும்” என்றார். 

கடந்த செப்டம்பர் மாதம் முசாபர்நகரில் நடந்த கலவரத்தில் 67 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக