செவ்வாய், மார்ச் 25, 2014

239 பேரின் குடும்பத்துக்கு 5000 டாலர் இழப்பீடு: மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 8-ம் தேதி 239 பயணிகளுடன் புறப்பட்டு சென்று மாயமானதாக தேடப்பட்டு வந்த மலேசிய விமானம், இந்திய பெருங்கடலில் விழுந்து நொறுங்கியதாக 16 நாட்களுக்கு பிறகு மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகி இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

அந்த விமானத்தில் பயணம் செய்த தங்களது உறவினர்கள் உயிருடன் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செலவில் சீனத் தலைநகர் பீஜிங், மலேசிய தலைநகர் கோலாலம்பூர் ஆகிய இடங்களில் உள்ள ஓட்டல்களில் தங்கியிருந்தவர்களுக்கு இந்த செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து, கோலாலம்பூர் மற்றும் பீஜிங் நகரில் உள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவன அலுவலகங்களின் முன்பு விபத்துக்குள்ளான விமானத்தில் சென்ற பயணிகளின் உறவினர்கள் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்து பலியான 239 பயணிகளின் உறவினர்களுக்கும் தலா 5 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 3 லட்சம் ரூபாய்) இழப்பீடாக வழங்கப்படும் என்று மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக