ஞாயிறு, மார்ச் 23, 2014

விமானம் தேடுதல்: அதிநவீன இந்திய போர் விமானம் விரைந்தது

239 பயணிகளுடன் காணாமல் போன மலேசிய விமானத்தைத் தேடும் பணிக்கு இந்திய கடற்படையின் அதிநவீன போர் விமானம் பி8ஐ அரக்கோணம் ராஜாளி தளத்தில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளதாக கமாண்டிங் அதிகாரி தெரிவித்தார்.
கடந்த 8–ந் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற மலேசிய விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களில் திடீரென மாயமாக மறைந்தது. இதுவரை அந்த விமானம் என்ன ஆனது என்று தெரியவில்லை.
இதையடுத்து 26 நாடுகளை சேர்ந்த விமானங்களும், கப்பல்களும் இந்த விமானத்தை கடல் பகுதியில் தேடி வருகின்றன.
இந்திய கடற்படையின் அதி நவீன போர் விமானம் பி8ஐ–யும் அரக்கோணம் ராஜாளி தளத்தில் இருந்து புறப்பட்டு சென்று தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இது குறித்து அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமானதள கமாண்டிங் அதிகாரி புனித்குமார் பஹெல் நிருபர்களிடம் கூறியதாவது:–
மலேசிய விமானத்தை தேடும் பணிக்காக அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி விமானப் படைதளத்தில் இருந்து பி8ஐ எனும் அதிநவீன போர் விமானமும், மற்றொரு விமானமும் சென்றுள்ளன. இதில் ஒன்று அந்தமான் தீவின் தலைநகர் போர்ட்பிளேரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. மற்றொரு விமானம் மலேசிய டூபாங் விமான தளத்தை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்திய பெருங்கடலில் இரு விமானங்களும் தீவிரமாகத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன என்று கூறினார்.

பி8ஐ விமானம் உலகின் அதிநவீன போர் விமானம், கடலில் சுமார் 10 ஆயிரம் அடி ஆழத்தில் இருப்பவற்றைக் கூட இவ்விமானத்தில் உள்ள அதிவீன கேமராமூலம் துல்லியமாகப் படமெடுக்கலாம். விமானமத்தின் கருப்புப் பெட்டி போன்ற ஒலி சமிக்ஞைகளை உருவாக்கும். கருவிகள் நீரில் பல ஆயிரம் அடி ஆழத்தில் இருந்தாலும் அதன் சமிக்ஞைகளை பதிவு செய்து அதனை கைப்பற்றக்கூடிய திறன் இந்த விமானத்துக்கு உண்டு.

இந்தியப் பெருங்கடலில் தொடர்ந்து 16 மணி நேரத்துக்கு மேல் நிற்காமல் பகலிலும், இரவிலும் தொடர்ந்து பறக்கும் ஆற்றல் கொண்டது இந்த விமானம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக