செவ்வாய், செப்டம்பர் 25, 2012

அமெரிக்க இராணுவத்தின் கஞ்சா பண்ணைகள். மாபியா வர்த்தகம் - ஆக்கிரமிப்பு இராணுவத்தின் நிழல் வியாபாரம் (புகைப்படங்கள் இணைப்பு)

இரவில் வந்து இறங்கும் அந்த இராணுவ விமானத்தில் இருந்து சில பார்சல்கள் மெல்ல விமான தளத்திற்குள் எடுத்து செல்லப்படாமல் சவலட் கார்களில் வரும் மாபியாக்களின் டிக்கியில் ஏற்றப்படுகின்றன. ஹவானா சுடுட்டு பிடிக்கும் கேர்ணலும், நவீன அல்காபோன்ஸ்களும் அதனை அமைதியாக பார்த்தபடி நிற்கின்றனர். இது நடப்பது ஏதோ ஒரு அமெரிக்க விமான தளத்தில். வந்திறங்கும் அந்த கார்கோ விமானம் ஆப்கானில் இருந்து வருகிறது.  என்னதான் அந்த பார்சல்களில் இருக்கிறது?  ஆப்கானின் மலிவான மட்டரக
ப்ரவுன் சுகர். போதை தேசங்கள் !!. லத்தீன் அமெரிக்காவில் பனாமா, கொலம்பியா, நிக்கிராகுவா, ஈக்குவடோர், மெக்ஸிகோ என பரந்து விரிகின்றன. மேற்காசியாவில் ஈரான், தஜிகிஸ்தான், அஸர்பைஜான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என பரந்து விரிகின்றன. கோல்டன் ட்றையங்கிள், கோல்டன் ஷோன் என பல பெயர்கள் இவற்றிற்கு.
அமெரிக்க ஏகாதிபத்தியம் இரட்டை கோபுர தகர்ப்பை காரணம் காட்டி ஆப்கானில் உஸாமா வேட்டையில் ஆரம்பித்தது. ஆப்கானின் கனிய வளங்களை ஹமீட் ஹர்ஸாய் எனும் எண்ணைய் ஏஜென்டை ஜனாதிபதியாக்கி கொள்ளையடித்தது. இந்த கொள்ளைக்கு சுதந்திரத்திற்கான கொள்ளை, ஜனநாயகத்திற்கான கொள்ளை, பயங்கரவாதத்திற்கு எதிரான கொள்ளை என பல பெயர்கள் சூட்டப்பட்டே சூறையாடப்பட்டன.
அமெரிக்க முதலாளித்துவமும், அதன் ஆளும் வர்க்கமும் கனியங்களையும் ஏனைய வளங்களையும் கொள்ளையடித்து தம்முள் பங்குபோடுவதனை பல வகையில் நாம் கண்டுள்ளோம். ஆனால் ஆப்கானியல் இந்த ஏகாதிபத்தியத்தின் ஏவல் நாயாக செயற்படும் அமெரிக்க கூட்டுபடை இராணுவம் தம் எஜமானர்களிற்கு தெரியாமல் கஞ்சா வளர்க்கிறது.
அபினை அறுவடை செய்கிறது. ஒபியத்தை சுமந்து கொண்டு அதன் ஹம்பி ஆமர் வாகனங்கள் பயணிக்கின்றன. ஹெரோயின் பொதிகளை சுமந்து கொண்டு அதன் ஹமர் துருப்புகாவி வாகனங்கள் விமான நிலையம் நோக்கி ஓடுகின்றன.
இன்றைய திகதியில் உலகின் நம்பர் 1 போதை உற்பத்தியாளர்கள் அமெரிக்க இராணுவத்தினர். உலகின் நம்பர் 1 போதை ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க இராணுவத்தினர். உலகின் நம்பர் 1 போதை விநியோகஸ்தர்கள் அமெரிக்க இராணுவத்தினர். இதில் விஷேடம் என்னவென்றால் இவர்கள் இதனை அனுப்பும் இடம் அமெரிக்கா. அமெரிக்காவிற்கு அதன் இராணுவமே அனுப்பி வைக்கும் பார்சல்கள் ஏராளம். இதன் பெயர் தான் பயங்கரவாதத்திற்கு எதிரான போர்.
ஆச்சரியமாக இருக்கலாம். சரி... படங்களையாவது பாருங்கள்.!

 
file:///D:/MIKE/WEB_DEVEL/WRH/IMAGES/afghan_opium0430.jpg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக