சனி, செப்டம்பர் 29, 2012

ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்சனுக்கு புகழாரம் சூட்டும் ஜமாஅத்தே இஸ்லாமியின் அதிகாரப்பூர்வ ஏடு !

புதுடெல்லி:சங்க்பரிவார பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் மறைந்த முன்னாள் சர்சங்க்சாலக் (தேசிய தலைவர்) கு.சி.சுதர்சனுக்கு ஜமாஅத்தே இஸ்லாமியின் அதிகாரப்பூர்வ ஏடான தஃவத் புகழாரம் சூட்டியுள்ளது. சுதர்சனின் மரணத்தில் மிகுந்த துக்கம் அடைவதாக அப்பத்திரிகையின் தலையங்கத்தில் ‘கபர் ஓ நதர்’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. இதுத்தொடர்பாக அப்பத்திரிகையில்
வெளியான தலையங்கத்தில் குறிப்பிட்டிருப்பது: “சுதர்சனின் மறைவால் ஆர்.எஸ்.எஸ் எவ்வளவு தூரம் துயரம் அடைந்தது என்பதை உறுதியாக கூற முடியாது. ஆனால், கடந்த ஈத் பெருநாள் தொழுகையின் போது அவர் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தாஜுல் மஸ்ஜிதிற்கு சென்று தொழுகை நடத்தவிருந்தார். ஆனால், அவரது ஆதரவாளர்களும், போலீசாரும் போக்குவரத்துக்கு இடையூறாகும் என்று கூறி அவரை தடுத்துவிட்டனர். ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வ கொள்கையில் இருந்து பல முறை அவர் மாறுபட்டார். பா.ஜ.க தலைமைக்கு எதிராக அவர் கருத்து தெரிவித்தார். இந்திராகாந்தி திறமையற்றவர் என்று கூறியிருந்தார்.
ஒரு முஸ்லிம் அறிஞர் இஸ்லாமிய நூல்களை சுதர்சனுக்கு அனுப்பிக் கொடுத்திருந்தார். இஸ்லாத்தைக் குறித்து மறு ஆய்வுச்செய்ய அவர் தயாராக இருந்தார். மஸ்ஜிதிற்கு வரவிருந்த சுதர்சனை, ம.பி பா.ஜ.க முதல்வர் பாபுலால் கவுர் ஒரு முஸ்லிம் நண்பரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.” இவ்வாறு முக்கியத்தும் அளித்து எழுதியுள்ள தலையங்கத்தில் அப்பத்திரிகை கூறுகிறது.
ஆனால், சுதர்சனுக்கு மறதி நோய் பாதித்திருந்ததாக பலரும் கூறுகின்றனர். ஏற்கனவே கர்நாடகா மாநிலத்தில் வைத்து திடீரென அவர் பல மணிநேரம் காணாமல் போனார். பின்னர் ஒரு வீட்டில் இருந்து அவர் மீட்கப்பட்டார். போபாலில் ஈத் பெருநாள் தொழுகை நடக்கும் திடலுக்கு மறதி நோய் காரணமாக சென்று கையை கட்டிக்கொண்டு நின்றார் என்றும், பின்னர் அவரது ஆதரவாளர்கள் அவரை அழைத்துச் சென்றதாகவும் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் உள்ளவர்கள் கூறியிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக