செவ்வாய், செப்டம்பர் 25, 2012

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் மிரட்டல்: தேவையற்ற கூக்குரல் – பாரக் ஒபாமா !

வாஷிங்டன்:ஈரானுக்கு எதிராக இஸ்ரேலின் போர் மிரட்டலை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நிராகரித்துவிட்டார். ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் போர் மிரட்டலை தான் தவிர்க்க விரும்பும் தேவையற்ற கூக்குரலாகவே கருதுகிறேன் என்று ஒபாமா தெரிவித்துள்ளார். சி.பி.எஸ் தொலைக்காட்சி சானலுக்கு அளித்த பேட்டியில் ஒபாமா இக்கருத்தை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் தேசிய
விருப்பத்திற்கு உட்பட்டதையே செய்வோம் என்று கூறிய ஒபாமா, வெளியில் இருந்து வரும் அழுத்தங்களுக்கு மதிப்பளிக்கமாட்டோம் என்றார்.
ஈரானின் அணு சக்தி திட்டத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவை நிர்பந்தித்து வருகிறார். ஆனால், அமெரிக்காவோ (ஏற்கனவே ஈராக், ஆப்கான் போரில் கிடைத்த அனுபவம் காரணமாக) ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு கால வரம்பை நிர்ணயிக்க முடியாது என கூறி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக