வெள்ளி, செப்டம்பர் 21, 2012

ஹஸாரேயின் முடிவு துரதிர்ஷ்டவசமானது:கெஜ்ரிவால் !

Hazare's decision to snap ties shocking says Kejriwalபுதுடெல்லி:ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஹஸாரே குழு உடைந்து போய்விட்டது. அரசியல் கட்சி துவங்கும் கெஜ்ரிவாலின் முடிவிற்கு கிளம்பிய எதிர்ப்பே இதற்கு காரணம். இந்நிலையில் ஹஸாரேயின் முடிவு அதிர்ச்சியளிப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி அரசியல் கட்சி தொடங்குவதற்கு பெரும் ஆதரவு உள்ளதாக கெஜ்ரிவால் தெரிவித்தார். ஆனால் அரசியல் கட்சி தொடங்குவது, தேர்தலில்
போட்டியிடுவது ஆகியவற்றில் தமக்கு விருப்பமில்லை என  ஹசாரே கூறிவிட்டார். புதிய கட்சி தொடங்குபவர்கள் தமது பெயரையும் படத்தையும் பயன்படுத்தக் கூடாது எனவும் அவர் கூறினார்.
இந்நிலையில் புது டெல்லியில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்திய பின் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: “அரசியல் கட்சி தொடங்க வேண்டுமெனக் கூறி வரும் குழுவினரிடமிருந்து பிரிந்து செல்வது என  ஹசாரே எடுத்துள்ள முடிவு அதிர்ச்சி அளிக்கிறது; நம்ப முடியாதது; துரதிருஷ்டவசமானது; இது வேதனையளிக்கும் முடிவு.
அவர் எனது குரு. என் தந்தைக்கு சமமானவர். ஹஸாரேயின் படம் எங்கள் இதயத்தில் பதிந்துள்ளது. அவருடைய ஆசி எப்போதுமே எங்களுக்குக் கிடைக்க வேண்டும். அவருடைய கொள்கைகள்தான் எங்கள் கட்சியின் அடித்தளமாக இருக்கும்” என்றார்.
ஹசாரே குழுவில் முக்கிய பங்கு வகிப்பவருள் ஒருவரான முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடி கூறியது:
“அரசியல் கட்சி தொடங்குவதற்கு என்ன அவசியம் வந்துவிட்டது? நாடு முழுவதும் எல்லா இயக்கங்களையும் ஒற்றுமைப்படுத்தி, வலிமையான ஜனலோக்பால் சட்டம், ஊழல் எதிர்ப்பு ஆகிய விஷயங்களில் அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடி தர முடியும்” என கிரண் பேடி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக