புதுடெல்லி:பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எதிராக பொது நிகழ்ச்சியொன்றில் சட்டையை கழற்றி ‘கோ பேக்’ என கூறிய நபர் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டார். டெல்லி விஞ்ஞான் பவனில் இந்திய சட்ட நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பொருளாதார முன்னேற்றம் தொடர்பான கருத்தரங்கம் இன்று காலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன்சிங், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
பிரதமர் மன்மோகன்சிங் தமது உரையை ஆற்றத் தொடங்கிய போது பார்வையாளர்கள் வரிசையில் இருந்த ஒருவர் எழுந்து நின்று தமது சட்டையைக் கழற்றி சுழற்றியபடியே “பிரதமர் மன்மோகன்சிங்கே திரும்பிப் போ” என்று உரத்த குரலில் முழக்கம் எழுப்பினார். இதனால் அங்கு திடீரென பரபரப்பும் பதற்றமும் நிலவியது. பிரதமர் மன்மோகன்சிங்கும் தமது உரையை நிறுத்திவிட்டார். பாதுகாப்புப் படை அதிகாரிகள் விரைந்து சென்று முழக்கம் எழுப்பியவரை குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர். அதன் பின்னர் பிரதமர் மன்மோகன்சிங் தமது உரையை தொடர்ந்தார்.
மன்மோகன்சிங்கிற்கு எதிராக சட்டையை கழற்றி எதிர்ப்பு தெரிவித்தவர் பீகாரைச் சார்ந்த சந்தோஷ்குமார் என்று போலீஸ் தெரிவித்தது. பாட்லாஹவுஸ் நீதிமன்றத்தில் சந்தோஷ் குமார் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அதேவேளையில் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்தமைக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக