வியாழன், செப்டம்பர் 27, 2012

ரிட்டையராகும் விஜயகுமார் ஐ.பி.எஸ்.! வீரப்பன் கதையை 300 பக்க நாவலாக எழுத திட்டம் !

டெல்லி: மத்திய ரிசர்வ் படை இயக்குநராக இருக்கும் விஜயகுமார் இந்த மாதம் 30-ந் தேதியுடன் ஓய்வுபெற உள்ள நிலையில் சந்தனக் கடத்தல் வீரப்பனை மையமாக வைத்து ஒரு நாவல் ஒன்றை எழுத உள்ளார். சி.ஆர்.பி.எப். தலைமையகத்தில் விஜயகுமார் பணி ஓய்வு பெறும் நிகழ்ச்சி நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதற்கான சுற்றறிக்கை சி.ஆர்.பி.எப்.ப்பின் அனைத்து பிரிவுகளுக்கும் நேற்று
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அதிரடிப்படைக்கு விஜயகுமார் பொறுப்பேற்றிருந்த போதுதான் 2004-ம் ஆண்டு வீரப்பன் கொலை செய்யப்பட்டார். சென்னை மாநகரக் காவல்துறை ஆணையராக விஜயகுமார் இருந்த போது அயோத்தியா குப்பம் வீரமணியை மெரினாவில் வைத்து சுட்டுக் கொன்றது போலீஸ்.
அதிரடிப்படையில் இருந்து ஹைதராபாத் போலீஸ் அகாதெமியில் ஐபிஎஸ் பயிற்சி நிறுவன தலைவராக இருந்தார். கடந்த 2 ஆண்டுகளாக மத்திய துணை ராணுவப் படையின் தலைவராக இருந்து வருகிறார். இவரது பொறுப்பு காலத்தில்தான் மாவோயிஸ்ட் முக்கிய தலைவரான கிஸன்ஜி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இருப்பினும் விஜயகுமாருக்கு ஓராண்டு பணி நீட்டிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. அனேகமாக மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றில் ஆலோசகர் பொறுப்பில் விஜயகுமார் நியமிக்கப்பட உள்ளார்.
தன்னுடைய ஓய்வு காலத்தில் வீரப்பன் கதையை மையமாக வைத்து நாவலை எழுதவும் திட்டமிட்டிருக்கிறார் விஜயகுமார்.
இது பற்றி விஜயகுமார் கூறுகையில், என்னிடம் ஆயிரத்துக்கும் அதிகமாக பக்கங்கள் கொண்ட தரவுகள் இருக்கின்றன. என்னுடைய நினைவுகளில் இருந்து அனைத்தையும் ஒருங்கிணைத்து சுமார் 300 பக்கமாகக் கொண்ட நாவலாக எழுத இருக்கிறேன். இது ஒரு போலீஸ்காரரின் எழுத்தாக இருக்காது. வெகுஜன வாசகனுக்குரியதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இன்னும் எத்தனை உண்மைகள் வருமோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக