குவைத்:நாட்டின் தேர்தல் சட்டத்தை திருத்தவேண்டும் என்ற அரசின் கோரிக்கையை குவைத் நாட்டு உச்சநீதிமன்றம் தள்ளுபடிச் செய்துவிட்டது. 2006-ஆம் ஆண்டு அமலுக்கு வந்த தேர்தல் சட்டத்தை நீதிமன்றம் உறுதிச் செய்துள்ளது. தற்போதைய சட்டத்தில் திருத்தம் தேவையில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. வரவிருக்கும் தேர்தலை தங்களுக்கு அனுகூலமாக மாற்றுவதற்கான முயற்சியே தேர்தல் சட்ட சீர்திருத்தம் என்று
அரசு கோருவதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் நேற்று முன் தினம் பாராளுமன்றத்திற்கு வெளியே அரசுக்கு எதிராக கண்டனப் பேரணியை நடத்தினர். உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து அரசு ராஜினாமாச் செய்துவிட்டு தேர்தலை சந்திக்கவேண்டும் என்று எதிர்கட்சி எம்.பியான ஃபைஸல் அல் மிஸ்லம் கூறினார்.
இஸ்லாமிய கட்சிகளை பெரும்பான்மையாக கொண்ட குவைத் பாராளுமன்றத்தை அரசியல் சாசன நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் கலைத்தது. பின்னர் பழைய பாராளுமன்றத்தை மீண்டும் நியமித்தது. பிப்ரவரி மாதம் நடந்த தேர்தல் சட்டவிரோதம் என்று கூறி இந்நடவடிக்கையை நீதிமன்றம் மேற்கொண்டது. ஆனால், குவைத்தில் விரைவில் தேர்தல் நடத்தவேண்டும் என்பதே எதிர் கட்சியினரின் கோரிக்கையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக