வியாழன், செப்டம்பர் 27, 2012

சீனாவிலிருந்து கொசு பேட், பொம்மை மட்டுமல்ல இப்போது சவப்பெட்டியும் வந்து விட்டது !

திருவனந்தபுரம்: சீனாவிலிருந்து மலிவு விலை மற்றும் அபாயகரமான பொம்மைகள், எலக்ட்ரானிக் கொசு பேட் உள்ளிட்டவற்றை இந்திய மார்க்கெட்டை கலக்கி வரும் நிலையில் தற்போது சவப்பெட்டிகளையும் அங்கிருந்து இங்கு கொண்டு வர ஆரம்பித்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை சீனாவிலிருந்து ஒரு குண்டூசி கூட இந்தியாவுக்கு வந்ததில்லை. ஆனால் இந்தியாவின் தாராளமயமாக்கல்
கொள்கையின் எதிரொலியாக கடந்த 20 வருடங்களாக சீனாவிலிருந்து என்னவெல்லாமோ இந்திய மார்க்கெட்டைப் பிடிக்க ஆரம்பித்து விட்டன. கொசு பேட் வந்தது, பொம்மைகள் வந்து குவிந்தன.செல்போன்களும் வந்தன. இந்த நிலையில் தற்போது சவப்பெட்டிகளையும் அங்கிருந்து கொண்டு வர ஆரம்பித்துள்ளனர்.
கேரளாவுக்கு சீனாவிலிருந்து 170 சவப்பெட்டிகளை இறக்குமதி செய்துள்ளனர். ஷாங்காய் நகரிலிருந்து ஆலப்புழாவுக்கு இவை வந்துள்ளன. இதுதொடர்பாக ஆலப்புழாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம், ஷாங்காய் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாம்.
இதுகுறித்து கேரள நிறுவனத்தின் உரிமையாளர் தாமஸ் கூறுகையில், சவப்பெட்டிகளைத் தயாரித்து அனுப்புவது தொடர்பாக ஷாங்காய் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். இந்த சவப்பெட்டிகளுக்கு சொர்க்கப்பெட்டி என்று பெயர் வைத்துள்ளனர். சீனாவில் அபரிமிதமாக கிடைக்கு் பாலோனியா என்ற மரக்கட்டையால் தயாரிக்கப்படுகிறது இந்த சவப்பெட்டிகள்.
இந்த மரமானது ஒரே வாரத்தில் அரித்துப் போய் விடுமாம். இதனால் நீண்டகாலத்திற்கு மண்ணிலேயே இருக்காமல் அடக்கம் செய்த சில நாட்களிலேயே இந்த மரப்பெட்டியும் அரித்துப் போய் விடும் என்பதால், சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக கருதப்படுகிறதாம்.
இந்தப் பெட்டியின் விலை ரூ. 20,000 முதல் 2 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக