செவ்வாய், செப்டம்பர் 25, 2012

முஸ்லிம்கள் போராட்டம் எதிரொலி - கொழும்பு அமெரிக்கத் தூதரகம் மூடப்பட்டது !

நபிகள் நாயகம் பற்றி அவதூறாகவும் வக்கிரமாகவும் யுட்யூபில் வெளியிடப்பட்ட படத்தைக் கண்டித்து உலகெங்கும் உள்ள முஸ்லீம்கள் போராடி வருகின்றனர். பல உலக நாடுகளில் உள்ள அமெரிக்க தூதுவராலயங்கள் தாக்கப்பட்டன. மேலும் பல நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு முன்பாக முஸ்லீம்கள் போராட்டங்களை நடத்தி  வருகின்றனர். அதுபோல இலங்கையில் உள்ள முஸ்லீம்களும் கடந்த வெள்ளிக்கிழமை தமது எதிர்ப்பைக் காண்பித்திருந்தனர். மேலும் இன்று திங்கட்கிழமை காலையும் கொழும்புவில் ஒரு பெரும் போராட்டம் வெடித்துள்ளது. கிழக்கு மாகான
ஆளுநர் அலவி மெளலானா தலையில் இக்கண்டனப் போராட்டம் அமைதியாக இடம்பெற்றது. சுமார் 10,000 பேருக்கும் அதிகமான இலங்கை முஸ்லீம்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர். முஸ்லிம்களின் இந்தப் போராட்டத்தால் கொழும்பு அமெரிக்க தூதரகம் மூடப்பட்டதோடு, அங்கே பணி புரிந்த அதிகாரிகள் பாதுகாப்பாகப்  பின் வாசல் வழியாக வெளியேறியுள்ளனர். இலங்கை காவல்துறை அதிகாரிகள் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளை,  பாதுகாப்பாக அப்புறப்படுத்தி நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கவைத்துள்ளனர் எனவும் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக