சனி, செப்டம்பர் 22, 2012

தாக்குதல் தீவிரம் எதிரொலி: ஆப்கானிஸ்தானில் 33 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் வாபஸ் !

33 thousand US surge troops leave Afghanistanவெல்லிங்டன்:பாரக் ஒபாமா அமெரிக்க அதிபராக தேர்வுச்செய்யப்பட்ட பிறகு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானிற்கு கூடுதலாக அனுப்பிய 33 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளனர். இத்தகவலை அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லியோன் பனேட்டா தெரிவித்தார். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் நடத்தும் வேளையில் அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். தாலிபானை கட்டுப்படுத்துவதிலும், ஆப்கான் ராணுவத்திற்கு பயிற்சி
அளிப்பதிலும் வெற்றிகரமாக தங்களது பொறுப்பை நிறைவேற்றிய பிறகே ராணுவம் வாபஸ் பெறப்படுவதாக பனேட்டா கூறுகிறார். ராணுவம் வாபஸ் பெறுவது மைல் கல் என்று பனேட்டா குறிப்பிட்டார்.
ஆனால், ஆப்கான் ராணுவத்தினர் மற்றும் தாலிபான் போராளிகளிடமிருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படையினர் மீதான தாக்குதல் அண்மைக்காலமாக தீவிரமடைந்து வருவதே அமெரிக்க படையினர் வாபஸ் பெறப்படுவதற்கு காரணம் என கூறப்படுகிறது. 33 ஆயிரம் ராணுவத்தினர் வாபஸ் பெறுவதன் மூலம் ஆப்கானில் மீதமுள்ள அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கை 68 ஆயிரமாக குறையும்.
பாதுகாப்பு பொறுப்பை ஆப்கான் ராணுவத்திடம் ஒப்படைக்கும் நடவடிக்கை 2014-ஆம் ஆண்டு நிறைவுறும் என்று பனேட்டா தெரிவித்தார். 2014-ஆம் ஆண்டு இறுதியில் ஆக்கிரமிப்பு ராணுவத்தினரை முழுமையாக வாபஸ் பெறுவோம் என்று நேட்டோ ஏற்கனவே அறிவித்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக