இன்று மாலை புதுடில்லியில் நடைபெற்ற காவிரி ஆணையக் கூட்டம் உடன்பாடு எதுவும் எட்டப் படாமல் தோல்வியில் முடிவடைந்தது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று காவிரி நதிநீர் ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. தமிழகம் சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதாவும் கர்நாடகத்தின் சார்பில் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், புதுவை முதல்வர் ரங்கசாமி மற்றும் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ஜோசப் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.
காவிரி ஆணையத்தின் தலைவர் என்ற முறையில், செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 15 வரை தினசரி 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என பிரதமர் ஓர் உத்தரவு பிறப்பித்தார், இதையும் கர்நாடக அரசு ஏற்கவில்லை.
சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, தமிழ்நாட்டில் 15 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிரைக் காப்பாற்ற 24 நாட்களுக்கு குறைந்தபட்சம் தினசரி 2 டிஎம்சி திறந்துவிட வேண்டும் என கோரியதை கர்நாடகம் ஏற்கவில்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடுவதைத்த தவிர தமிழ்நாட்டு்க்கு வேறு வழியில்லை என்றும் முதலவர் ஜெயலலிதா தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக