வெள்ளி, செப்டம்பர் 21, 2012

உலகம் முழுவதற்கும் 3 ஆயிரம் வருடங்களுக்கு போதுமான வைரங்கள் ஒரே இடத்தில் கண்டுபி்டிப்பு !

 ரஷியாவில் உள்ள சைபீரிய பகுதியில் 62 மைல் அகலம் கொண்ட பள்ளத்தாக்கு உள்ளது. பூமி மீது 3 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மோதிய விண்கல் மூலம் இந்த பள்ளத்தாக்கு ஏற்பட்டதாக கருதப்படுகிறது. இங்கு ஆய்வாளர்கள் பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வந்தனர். அந்த பகுதியில் சுரங்கம் தோண்டி ஏதாவது தாது பொருட்கள் கிடைக்கிறதா என்றும் ஆய்வு செய்தனர்.  அதில் ஏராளமாக வைரங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது பல லட்சம் டன் வைரங்கள் இங்கு இருக்கலாம் என்று கணக்கிட்டு உள்ளனர். இந்த வைரங்கள் உலகம் முழுவதற்கும் 3 ஆயிரம் வருடங்களுக்கு போதுமானதாகும். 

உலகில் வேறு எந்த சுரங்கத்திலும் இந்த அளவுக்கு வைரங்கள் கண்டு பிடிக்கபட்டதில்லை. மேலும் இந்த வைரம் மற்ற வைரங்களை விட தரமானதாக உள்ளது. மற்ற வைரங்களை விட 2 மடங்கு வலுவாகவும் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக