சனி, செப்டம்பர் 29, 2012

இறைத்தூதரை அவமதித்த திரைபடத்தை இயக்கிய அயோக்கியன் கைது !

லாஸ் ஏஞ்சல்ஸ்:இஸ்லாத்தின் இறைத்தூதரை இழிவுப்படுத்தும் விதமாக திரைப்படத்தை இயக்கி தயாரித்த நகவுலா பாசிலி நகவுலா என்பவனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். வங்கி மோசடி வழக்கில் தண்டிக்கப்பட்ட நகவுலா, நன்னடத்தை விதிகளை பேணவில்லை என்ற காரணத்தால் கலிஃபோர்னியா போலீஸ் அவனை கைது செய்துள்ளது. கடந்த வியாழக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நகவுலாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் மறுத்ததால் சிறையில் அடைக்கப்பட்டான். ஐந்து ஆண்டுகாலம் கம்ப்யூட்டர் மற்றும் இணையதளத்தை
உபயோகிக்க கூடாது என்று நகவுலாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அமெரிக்க அட்டர்னியின் செய்தித் தொடர்பாளர் தாமஸ் ம்ரோஸக் இத்தகவலை வெளியிட்டார்.
மூடிய அறைக்குள் நகவுலாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. தலை முழுமையாக மறைத்தவாறு பலத்த பாதுகாப்புடன் நகவுலா சிறைக்கு கொண்டுச் செல்லப்பட்டான்.
எகிப்து வம்சா வழியைச் சார்ந்த நகவுலா, 2010-ஆம் ஆண்டு வங்கி மோசடி வழக்கில் 21 மாத கால தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், தற்பொழுது ஒரு சமூகத்தை கொந்தளிப்பில் ஆழ்த்தும் மோசமான திரைப்படத்தை இயக்கி தயாரித்த நகவுலா, நீதிமன்றத்திற்கு அளித்த வாக்குறுதிகளில் எட்டு வாக்குறுதிகளை மீறிவிட்டதாக கண்டறிந்ததால் ஜாமீன் மறுக்கப்பட்டது. போலி பெயரில் திரைப்படத்தை நகவுலா,  வெளியிட்டதாக அரசு தரப்பு வழக்குரைஞர் கூறினார். சாம் பாசிலி என்ற பெயரில் திரைப்படத்தில் இவன் தன்னை அறிமுகப்படுத்தினான்.
இறைத்தூதரை இழிவுப்படுத்தும் விதமாக தயாரிக்கப்பட்ட  ‘இன்னொஸன்ஸ் ஆஃப் முஸ்லிம்” என்ற திரைப்படத்தின் 14 நிமிடங்களைக் கொண்ட ட்ரைலரை கடந்த ஜூலையில் யூ ட்யூப் இணையதளத்தில் நகவுலா அப்லோட் செய்துள்ளான். இவன் யூ ட்யூபில் அப்லோட் செய்த மோசமான திரைப்படத்தின் டிரைலரை யாரோ ஒரு விஷமி, அரபு மொழியில் மொழிபெயர்த்து மீண்டும் யூ ட்யூபில் அப்லோட் செய்ததால் முஸ்லிம் உலகம் முழுவதும் கொந்தளிப்பில் ஆழ்ந்தது. லிபியாவின் அமெரிக்க தூதர் உள்பட 30க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். நகவுலாவின் தலைக்கு பாகிஸ்தான் ரெயில்வே அமைச்சர் குலாம் அஹ்மத் பிலோர் 55 லட்சம் பரிசு பணம் தருவதாக அறிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக