இஸ்லாமாபாத் : ஆட்சேபகரமான உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளன என்று குற்றம் சாட்டி யூ டியூப் உட்பட சுமார் 20,000 வரை இணையதளங்களும், வலையூட்டுகளும் பாகிஸ்தான் அரசால் தடை செய்யப்பட்டுள்ளன. இஸ்லாத்திற்கு விரோதமான சினிமா இணையதளங்களில் வெளியிடப்பட்டதையொட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தொலைத்தொடர்பு
அமைச்சகம் அறிவித்துள்ளது. முன்னதாக சர்ச்சைக்குரிய திரைப்படத்தைத் தடை செய்ய முடியாமல் போனது சம்பந்தமாக பாக்., தொலைத்தொடர்பு அதிகாரத்தின் தலைவருக்கெதிராக வழக்கு தொடுக்கப்படவேண்டும் என்று லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
யூ டியூபின் மீதுள்ள தடையை தற்பொழுது நீக்கும் எண்ணம் இல்லை என்று அதிகாரிகள் கூறினார்கள். அந்தத் திரைப்படத்தை யூ டியூப் தடை செய்யாதவரை அதன் தடையை நாங்கள் நீக்கப்போவதில்லை என்று பாகிஸ்தான் தொலைத்தொடர்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக