சனி, அக்டோபர் 20, 2012

இளைய ஆதீனம் பதவியில் இருந்து என்னை நீக்கியதில் எந்த மனவருத்தமும் இல்லை: நித்தியானந்தா !

மதுரை இளைய ஆதீனமாக இருந்த நித்தியானந்தா நேற்று அந்த பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் திருவண்ணாமலையில் தனது ஆசிரமத்தில் நடந்த நவராத்திரி விழாவில் நித்தியானந்தா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-  இந்த பதவியை நான் கேட்டு பெறவில்லை. மதுரை ஆதீனம், அவராகவே கொடுத்தார். அவருக்கு சங்கடம் ஏற்படும் சூழ்நிலையில் நானே விலகி கொள்வதாக கூறி இருந்தேன். இன்னும் 2 நாட்களில் விலகி கொள்ள முடிவு செய்தும் இருந்தேன். அதற்கு முன் என்னை நீக்கியதாக நீங்களும் (நிருபர்கள்), சீடர்கள் கூறித்தான் எனக்கு தெரியும். இதனால் எனக்கு எந்தவித மன வருத்தமும் இல்லை. இது ஒரு பொறுப்புதான். இந்த பொறுப்பு தானாக வந்தது. இப்போது போய் விட்டது. இதனால் எனக்கு பொருளாதார இழப்பு இல்லை. 

கேள்வி: மதுரை ஆதீனம் சிலரால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்று கூறி உள்ளாரே? 

பதில்: இதுபோன்ற கற்பனையான கேள்விக்கு பதில் கூறமுடியாது. என்னால் அவருக்கு எந்தவித மனஉளைச்சலும், பாதிப்பும் ஏற்படாது. 

கேள்வி: உங்கள் நீக்கத்துக்கான காரணம் என்ன? 

பதில்: மதுரை ஆதீனம் கையெழுத்து போட்டால் டிஸ்மிஸ், நான் கையெழுத்து போட்டால் ராஜினாமா. மதுரை ஆதீனத்தில் இருந்த என்னுடைய சீடர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கொண்டு உள்ளனர். 

கேள்வி: உங்கள் உடைமைகளை எடுக்க மதுரைக்கு போவீர்களா? 

பதில்: அப்படி ஒரு சூழ்நிலை வராது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக