சிரியா:சிரியாவில் கடந்த ஒன்றரை வருடங்களாக அசாத்திற்கு எதிராக புரட்சிப் படையினர் நடத்தி வரும் போரில் பல்லாயிரக்கணக்கானோர் செத்து மடிந்து வருகின்றனர். நடந்துவரும் உள்நாட்டுப் போருக்கு ஒரு தற்காலிக முடிவு கிடைக்குமென
எதிர்பார்க்கப்படுகிறது.புரட்சிப்படைகளின் கை ஓங்கியிருந்தாலும் அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். இதற்கிடையே சிரியா தற்காலிக போர் நிறுத்தத்துக்கு தயாராக இருப்பதாக அறிவித்து உள்ளது. இது தொடர்பாக அரசு செய்தி தொடர்பாளர் ஜிகாத் அல் மாக்திஸ்து கூறும் போது எதிர் தரப்பினரும் முன்வந்தால் நாங்கள் தற்காலிக போர் நிறுத்தம் செய்ய தயாராக இருக்கிறோம்.
மேலும் புரட்சிப் படையினர் நிபந்தனை எதுவும் விதிக்காவிட்டால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக இருக்கிறோம் என்றார்.
மேலும் சிரியாவின் வட மேற்கு பகுதியில் உள்ள இட்லிப் என்ற இடத்தில் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்றை புரட்சி படையினர் சுட்டு வீழ்த்தினார்கள்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு இராணுவ ஹெலிகாப்டர் ஒன்றை சுட்டு வீழ்த்தியுள்ள நிலையில் தற்போது 2வது முறையாக ஹெலிகாப்டர் ஒன்றை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
ஹெலிகொப்டர் தீப்பிடித்து விழுவதை வீடியோ படம் பிடித்து புரட்சிப் படையினர் வெளியிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக