புனே:கோரிக்கை நிறைவேற இனி ஒருபோதும் உண்ணாவிரதப் போராட்டத்தின் பக்கம் தலைகாட்டமாட்டேன் என்று அன்னா ஹஸாரே கூறியுள்ளார். ஊழலுக்கு எதிரான ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கிய ஹஸாரே, பின்னர் சறுக்கல்களை நோக்கி பயணித்தார். பின்னர் அவரது போராட்டத்தை அரசும், பொதுமக்களும்
கண்டுகொள்ளவில்லை. இதனால் சோர்வடைந்த ஹஸாரே, உண்ணாவிரதப் போராட்டங்களை கைவிட்டார். இந்நிலையில் அவரது இயக்கத்திற்கு மூடுவிழா நடத்தப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஒரு குழுவினர் அரசியல் கட்சியை துவக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் கணேஷ் மண்டல் திருவிழாவில் கலந்துகொண்டு அன்னா ஹஸாரே உரையாற்றினார். அப்பொழுது அவர் கூறியது: “கோரிக்கைகள் நிறைவேற இனி ஒருபோதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தமாட்டேன். எதிர்காலத்தில் இதர வழிகளில் போராடுவதாக தீர்மானித்துள்ளேன். ஊழலற்ற நபர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பும் முயற்சி தொடரும். ஊழலற்ற இந்தியாவை உருவாக்க எனது இயக்கத்தில் இணைய ஏராளமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சேர விரும்புகின்றனர். நாட்டின் எதிர்காலத்தைக் குறித்து இளைஞர்கள் நல்லவற்றையே சிந்திக்கவேண்டும்.” இவ்வாறு அன்னா ஹஸாரே கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக