திருவனந்தபுரம் : கேரள மாநிலம் கோவளத்தில் நடைபெறும் சாகித்ய விழாவில் கலந்து கொண்ட பிரபல மனித உரிமைகள் ஆர்வலர் டாக்டர் பினாயக் சென் “ஃபலஸ்தீனர்களிடம் நீதி காட்டுங்கள்!” என்று தனது உரையில் கூறினார். அவ்விழாவில் இஸ்ரேலைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டுள்ளார்கள். “ஏழைகள் மீண்டும் ஏழைகளாக ஆகிறார்களா?” என்ற தலைப்பில் ஐந்தாவது வருட கே.சி. ஜான் நினைவு நாளில் டாக்டர் பினாயக் சென்
உரையாற்றினார். அப்பொழுது அவர், “இஸ்ரேலுடனும், இங்கே கலந்துகொண்டுள்ள இஸ்ரேல் பிரதிநிதிகளுடனும் நான் கேட்டுக்கொள்வது இதுதான். ஃபலஸ்தீனர்களுடன் நீதியுடன் நடந்துகொள்ளுங்கள்” என்று கூறினார்.
“இந்தியாவில் பட்டினிச் சாவுகளை இல்லாமலாக்குவதற்காக பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட உணவுப் பாதுகாப்பு சட்ட முன்வரைவை உடனடியாகப் பரிசீலிக்கவேண்டும். மக்களில் பெரும் பகுதியினரை கொடுமையான பட்டினியிலிருந்து காப்பதற்காக எல்லோருக்கும் போதுமான உணவு, தானியங்கள், கோதுமை, அரிசி, பயிறு வகைகள், உணவு எண்ணை ஆகியவை கிடைப்பதற்கேற்ப அந்தச் சட்ட முன்வரைவை மாற்றியமைக்க வேண்டும்.” இவ்வாறு மேலும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக