சனி, அக்டோபர் 20, 2012

மழை ஆலோசனைக் கூட்டத்திலுமா முதல்வருக்கு நன்றி சொல்வது! என்ன கொடுமையோ !

சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இது வழக்கமாக அமைச்சர்கள் நடத்தும் ஆலோசனைக் கூட்டம்தான். ஆனால் இந்தக் கூட்டத்திலும் கூட முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏகப்பட்ட புகழாரங்கள், நன்றிகள் கூறி நெளிய வைத்திருக்கிறார் அமைச்சர் வெங்கடாசலம். அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கூட்டிய இந்தக் கூட்டத்தில், வருவாய்துறை முதன்மை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நில நிர்வாக ஆணையர் மற்றும் முதன்மை செயலாளர் யத்தீந்திரநாத் ஸ்வேன், சீர்திருத்தத்துறை முதன்மை செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன், நிலசீர்திருத்த இயக்குனர்
சந்திரகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் தோப்பு வெங்கடாசலம் உதிர்த்த முத்துகளில் ஒன்று:
"சமுதாயத்தில் உள்ள அடித்தள மக்களும் ஏற்றம்பெறுவதை தாரக மந்திரமாக கொண்டு முதல்வர் ஜெயலலிதா பல திட்டங்களை நிறைவேற்றிவருகிறார். முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் வருவாய்த்துறை பற்றி பெருமையோடு குறிப்பிட்டுள்ளார். இப்படி பல்வேறு பெருமைகளையும், பாரம்பரியமும் மிக்க வருவாய் துறையின் அமைச்சராக பணியாற்றிட அனுமதி அளித்துள்ளமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை புரட்சித் தலைவி இதய தெய்வம் அம்மாவுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்"!
இது எப்பூடி?!
அமைச்சரின் கவனத்திற்கு: தமிழ்நாட்டில் இதுவரை 14 பேர் மழைக்குப் பலியாகி இருக்கின்றனர்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக