வியாழன், அக்டோபர் 04, 2012

செவ்வாய் கிரகத்தில் இருந்து விழுந்த எரிக்ல்லை ரூ.1.40 கோடிக்கு ஏலம் விடும் அமெரிக்க நிறுவனம் !

செவ்வாய் கிரகத்திலிருந்து விழுந்த எரி நட்சத்திர கல் ஒன்று, 1.40 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட உள்ளது. செவ்வாய் கிரகத்தின், அடிப்பகுதியிலிருந்து வெடித்துச் சிதறிய எரி நட்சத்திர கற்கள், விண்வெளியில் பயணித்து, கடந்த ஆண்டு, மொரோக்கோ பாலைவனத்தில் வந்து விழுந்தன. அமெரிக்க நிறுவனம் ஒன்று இதை சேகரித்தது. சேகரிக்கப்பட்ட எரி நட்சத்திர கல்லில், ஒரு கிலோ எடையுள்ள கல், கடந்த ஆண்டு, லண்டன் மியூசியத்திற்கு விற்கப்பட்டது. தற்போது, மீதமுள்ள 326 கிராம் எடையுள்ள எரி நட்சத்திர
கல், ஏலத்திற்கு விடப்பட உள்ளது.
இது குறித்து, அமெரிக்க ஏல நிறுவன அதிகாரி குறிப்பிடுகையில், ""பூமியில் விழுந்த, இந்த எரி நட்சத்திர கல், கறுப்பு நிறத்தில், பளபளப்பாக, வெளிப்புறத்தில் பல வடிவங்களுடன் உள்ளது. இ து தான், இதற்கு கூடுதல் மதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வகை எரி நட்சத்திர கற்கள் பொதுவாக சகாரா பாலைவனத்தில் விழும்,'' என, கூறினார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், வரும், 14ம் தேதி, இந்த கல் ஏலம் விடப்பட உள்ளது. 1.40 கோடி ரூபாய்க்கு இதன் விலை நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக