திங்கள், அக்டோபர் 08, 2012

ஃபலஸ்தீன்: தடையை மீறி காஸ்ஸாவை நோக்கி ஸ்வீடன் உதவிக் கப்பல் !

ரோம்:இஸ்ரேலின் பொருளாதாரத் தடையில் சிக்கித் தவிக்கும் ஃபலஸ்தீன் காஸ்ஸா மக்களுக்கு பல நாடுகளின் உதவிப் பொருட்களுடன் ஸ்வீடனிலிருந்து ஓர் உதவிக் கப்பல் புறப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் பல நாடுகளின் மனித உரிமை ஆர்வலர்களும் வருகின்றனர். பயணத்தின் ஒரு கட்டமாக இத்தாலியின் துறைமுக நகரமான நேப்ளஸுக்கு எஸ்டில்லி என்ற ஸ்வீடன் கப்பல் நேற்று வந்தடைந்தது. “காஸ்ஸா மக்களுக்கு அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அத்தியவாசியப் பொருட்களை நாங்கள் கொண்டு வருகின்றோம். தட்பவெப்ப நிலை சாதமாக
அமைந்தால் இரண்டு வாரங்களுக்குள் நாங்கள் காஸ்ஸா சென்றடைவோம்” என்று கப்பல் குழுவில் வரும் ஆன் இக்கி கூறினார்.
கனடா, இஸ்ரேல், நார்வே, ஸ்வீடன், அமரிக்கா ஆகிய நாடுகளைச் சார்ந்த 17 மனித உரிமை ஆர்வலர்கள் இந்தக் கப்பலில் பயணம் செய்கின்றார்கள்.
கடந்த 2010 மே மாதம் ஃபலஸ்தீன் உதவி முன்னணியின் முதல் குழு உதவிப் பொருட்களுடன் காஸ்ஸா புறப்பட்டது. இஸ்ரேலில் கொடும் பிடியில் சிக்கி வறுமையில் வாடும் காஸ்ஸா மக்களுக்கு உதவி செய்வதற்காக துருக்கி கொடியுடன் மாவி மர்மரா என்ற அந்தக் கப்பல் புறப்பட்டது. கப்பல் காஸ்ஸாவுக்கு அருகில் சென்றடைந்த பொழுது இஸ்ரேலிய இராணுவத்தினர் அந்தக் கப்பலில் அடாவடித்தனமாக நுழைந்து துப்பாக்கியால் சுட்டு 9 மனித உரிமை ஆர்வலர்களைக் கொன்றொழித்தது. இது உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
கடந்த வெள்ளிக்கிழமை எஸ்டில்லி கப்பலை நேப்ளஸ் துறைமுகத்தில் பார்வையிட வந்த நேப்ளஸ் மேயர் லுகி தி மஜிஸ்ட்ரிஸ் ஃபலஸ்தீன் மக்களுக்கு எங்கள் ஆதரவு எப்பொழுதும் உண்டு என்று கூறினார்.
ஸ்வீடனிலிருந்து பயணம் எஸ்டில்லி கப்பல் ஃபின்லாந்து, ஃபிரான்சு, ஸ்பெயின் ஆகிய நாடுகளைக் கடந்து இப்பொழுது இத்தாலியின் நேப்ளசை வந்தடைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக