வியாழன், அக்டோபர் 04, 2012

காற்றாலை அமைக்க தடை விதித்த ஒபாமா மீது சீன நிறுவனம் வழக்கு !

காற்றாலை அமைப்பதற்கு, தடை விதித்த, அமெரிக்க அதிபர் ஒபாமாவை எதிர்த்து, சீன நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. அமெரிக்காவின், ஓரிகான் மாகாணத்தில், கடற்படை தளத்துக்கு அருகே, சீனாவின், "ரால்ஸ்' நிறுவனம் நான்கு காற்றலைகளை அமைக்க இருந்தது. இந்த திட்டத்துக்கு அதிபர் ஒபாமா தடை விதித்துள்ளார். ஆளில்லா விமானங்கள், இந்த கடற்படை தளத்தில் பரிசோதிக்கப்படுகின்றன. எனவே, பாதுகாப்பு அச்சுறுத்தல்
உள்ளதால், சீன நிறுவனம் காற்றாலை அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அதிபர் ஒபாமா விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த, 22 ஆண்டுகளில், வெளிநாட்டு முதலீட்டுக்கு, அமெரிக்காவில் தடை விதிக்கப்படுவது, இதுவே முதல் முறை. "நிலத்தை கையகப்படுத்துவதற்கு முன், இதை தெரிவிக்காமல், தற்போது காற்றாலை அமைப்பதற்கு, சட்ட விரோதமாக அமெரிக்க அரசு தடை விதிக்கிறது. "பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது' என்பதற்கான ஆதரங்களை அமெரிக்க அரசு நிருபிக்கவில்லை' என, வாஷிங்டன் கோர்ட்டில், "ரால்ஸ்' நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக