வெள்ளி, அக்டோபர் 19, 2012

காந்திக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது புல் தடுக்கி விழுந்த ஆஸி. பிரதமர் ஜூலியா !

டெல்லி: இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட், மகாத்மா காந்தி சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது புல்வெளியில் தடுமாறி கீழே விழுந்து விட்டார். அவரது ஹைஹீல்ஸ் செருப்புதான் இந்த தடுமாற்றத்துக்குக் காரணம். நல்லெண்ணப் பயணமாக டெல்லி வந்துள்ளார் கிலார்ட். நேற்று அவர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்குச் சென்றார். அப்போது
ஹை ஹீல்ஸ் செருப்புடன் அவர் புல்வெளியில் நடந்தபோது திடீரென கால் தடுமாறி கீழே விழுந்து விட்டார். இதைப் பார்த்து அவரது பாதுகாவலர்கள் ஓடி வந்தனர். இருப்பினும் சுதாரித்து எழுந்து விட்ட கிலார்ட், இட்ஸ் ஓ.கே. என்று கூறிபடி தொடர்ந்து நடந்தார். பின்னர் புன்னகைத்தபடி, எனக்கு ஒன்றும் ஆகவில்லை. எனது செருப்பு புல்லில் சிக்கிக் கொண்டு விட்டது. அதனால்தான் விழுந்து விட்டேன் என்று கூறிச் சமாளித்தார்.
கிலார்ட் இப்படி புல் தடுக்கிக் கீழே விழுவது முதல் முறையல்ல. ஏற்கனவே சிட்னியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தபோதும் இப்படித்தான் தடுமாறி விழுந்தார் அவர். அதேபோல கான்பெராவில் கடந்த ஜனவரி மாதம் நடந்த நிகழ்ச்சியின்போதும் தடுமாறி விழப் போய் தனது ஷூவை பறி கொடுத்தார்.
கிலார்ட், சரியான செருப்பைப் போடாத காரணத்தால்தான் இப்படி அடிக்கடி கீழே விழுகிறார். ஹை ஹீல்ஸ் செருப்புக்குப் பதில் அவர் ஷூ அணிந்தால் இந்தப் பிரச்சினையை சமாளிக்கலாம் என்று ஆஸ்திரேலியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக