டெல்லி: அரசியல் முழுக்க முழுக்க அசிங்கமாகி விட்டது. எனவே அதற்குப் போவது என்பது முடியவே முடியாத செயல் என்று கூறியிருக்கும் அன்னா ஹசாரே, அர்விந்த் கெஜ்ரிவால் போட்டியிட்ட்டால் அவருக்காகப் பிரச்சாரம் செய்வேன் என்றும் தெரிவித்திருக்கிறார். டெல்லி வந்த அன்னா அங்கு செய்தியாளர்களிடம் கூறியதாவது: எப்படி உங்களால் ஒரு அரசியல் மாற்றை உருவாக்க முடியும் என்று அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோரிடம் நான்
கேட்டிருந்தேன். ஆனால் இதுவரை அவர்கள் பதில் தரவில்லை. அரசியல் முழுக்க முழுக்க அசிங்கமாகி விட்டது. அரசியல் பாதை புனிதமானதாக இப்போது இல்லை. எனவே அங்கு போவது பலனைத் தராது, முடியும் முடியாது. ஆனால் போராட்டப் பாதையானது இன்னும் புனிதமாகவே உள்ளது.
நாட்டுக்கு இனி அரசியலால் எதிர்காலம் இல்லை. மாபெரும் மக்கள் இயக்கம்தான் நல்லதொரு எதிர்காலத்தை காட்டும். அரசியலுக்குப் போவது என்பது சரியான முடிவல்ல். அரசியல் மாற்று வேண்டும் என்று கேஜ்ரிவால் உள்ளிட்டோர் கூறியபோது நான் அதை மறுக்கவில்லை. சரி என்றுதான் கூறினேன், ஆனால் நான் கேட்கும் 5-6 கேள்விகளுக்கு பதில் சொல்லி விட்டு தொடங்குங்கள் என்றேன். ஆனால் இதுவரை நான் கேட்ட கேள்விகளுக்கு அவர்களிடமிருந்து பதில் வரவில்லை.
நான் அரசியலுக்கு வர வேண்டும், தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நினைத்திருந்தால் அதை என்றைக்கோ செய்திருப்பேன். சாதாரண பஞ்சாயத்துத் தேர்தலில் கூட நான் போட்டியிட்டதில்லை. எனவே அரசியல் மாற்று சக்தி குறித்து நான் பேச விரும்பவில்லை என்றார் அன்னா.
கெஜ்ரிவாலுக்கு ஆதரவு
இதனிடையே இன்னொரு கருத்தையும் சொல்லியிருக்கிறார் அன்னா ஹாசாரே. தமது சிஷ்யரான கெஜ்ரிவால், டெல்லி சாந்தினி செளக் தொகுதியில் மத்திய அமைச்சர் கபில்சிபலை எதிர்த்துப் போட்டியிட்டால் தாம் நிச்சயம் பிரச்சாரம் செய்வேன் என்று கூறியிருக்கிறார். மேலும் நல்ல மனிதர்கள் அரசியலில் ஈடுபட்டால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்றும் கூறியிருக்கிறார்.
"காலையில ஒரு கருத்து மாலையில் நேரெதிரான கருத்து" என்பதுகூட அன்னாஜிக்கு கொள்கையாகிப் போச்சோ!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக